ஓவர் ஓவர்.. ஸ்டாலின் வரட்டும்.. விசிக உடனான திமுக பேச்சுவார்த்தை தள்ளிப் போனதன் பின்னணி இதுதானா?
சென்னை: லோக்சபா தேர்தலில் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து, விசிகவுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் காரணமாக பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக, காங்கிரஸுடன் கடந்த 28-ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார். அடுத்தகட்டமாக வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது திமுக. இந்தக் கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
தொடர்ந்து, விசிக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விசிகவுடன் பிப்ரவரி 12ம் தேதி திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் விசிகவுடன் ஏன் பேச்சுவார்த்தை தாமதமாகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தற்போது ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் தமிழகம் திரும்ப உள்ளார். அதன்பிறகு, ஸ்டாலினிடம் இதுவரை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விவரங்களை டிஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டுக் குழுவினர் எடுத்துரைக்க உள்ளனர்.
காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக என அனைத்து கட்சிகளுமே கடந்த தேர்தலை விட கூடுதலாக 1 தொகுதியையாவது எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகியவை தலா 3 தொகுதிகள் வேண்டும் என கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
3 + தனித்தொகுதி + தனி சின்னம்.. திமுகவை திணற வைக்கும் திருமா கணக்கு.. எகிறி வரும் விசிக!
மற்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலைப் போலவே தலா 2 சீட்களையும், காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்களையும் ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு கூட்டணி கட்சிகள் உடன்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை விசிக மற்றும் முஸ்லீம் லீக் உடன் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இதற்கிடையே, விசிக, 4 தொகுதிகள் கேட்டு, குறைந்தபட்சம் 3 தொகுதிகள் நிச்சயம் வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. தற்போது விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், இதே நிலை தான் தொடரும் என்பதால், காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு விசிகவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க திமுக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அன்றைய தினமே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications