'InTruth' இந்தியாவிற்கு வந்தால்.. அரசியல்வாதிகள் பிழைப்பில் மண் விழும்.. கனவிலும் பொய் பேச முடியாது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரு கல்லூரி மாணவர், அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த மிகப்பெரிய மிகப்பெரிய சாதகத்தை தகர்த்தெறிந்துள்ளார். அதுதான் பொய்க்கும் உண்மைச் சரிபார்ப்புக்கும் இடையிலான இடைவெளி. பொதுவாக அரசியல்வாதிகள் மேடைகளிலும், விவாதங்களிலும் பொய்யான புள்ளிவிவரங்களைப் பேசுவார். குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பேசுவார்கள். அதை ஊடகங்கள் ஆய்வு செய்து "இது பொய்" என்று சொல்வதற்குள், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரவி நம்பிவிடுவார்கள்.. பிறகு வரும் திருத்தங்கள் வந்தாலும் அது போய் சேராது. அதனை ஒரு கல்லூரி மாணவர் முறியடித்துள்ளார்.

பொய் பொய்யாக பேசியே இன்று ஆட்சிக்கு வருகிறார்கள் பலர். பலர் பொய்யை உண்மை போல் பேசுவதுடன், திரும்ப திரும்ப பேசி மக்களை நம்ப வைக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ஆப்படிக்கும் தொழில் நுட்பத்தை ஒரு கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார். இன்று ஒரு பொய்யை வேகமாக மக்களிடம் பரப்பிவிடலாம். ஆனால் அது பொய் என்று கூறி மீண்டும் வீடியோ போட்டால், அதே வேகத்தில் பரவாது.. மக்களிடம் பொய் சேர்ந்த வேகத்தில் உண்மை போய் சேராது என்பதே கசப்பான உண்மை.

If InTruth comes to India politicians won t be able to lie even in their dreams

அதனால் தான் நம்மூரில் பலஅரசியல்வாதிகள், நம்ப முடியாத பல பொய்களை, பல பொய்யான புள்ளி விவரங்களை அடித்துவிடுவார்கள். மக்களும் வாயை பிளந்து கேட்பதுடன், வைரலாக்கிவிடுவார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் அரசாங்கமே தவித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் பொய் பேசினால் அல்லது பொய்யான புள்ளி விவரங்களை பேசினால், அதனை ஊடகங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்து சொல்ல ஒரு நாட்கள் ஆகிறது. அல்லது உண்மை தெரிய சில நாட்களே ஆகிறது.

இந்த சூழலில் ஒருவர் பொய் பேசுகிறார், பொய்யான புள்ளி விவரத்தை பகிருகிறார் என்றால், உடனே அதனை கண்டுபிடித்து அலர்ட் செய்யும் தொழில் நுட்பத்தை இளைஞர் கண்டுபிடித்துள்ளார். பொய்க்கும் உண்மைச் சரிபார்ப்புக்கும் இடையிலான இடைவெளியை அந்த இளைஞர் குறைத்துள்ளார்.

பொய் உண்மையை கண்டுபிடிக்கும் இடைவெளியை 'InTruth' என்ற எக்ஸ்டென்சனை கல்லூரி மாணவர் கண்டுபிடித்தள்ளார். இது நொடி பொழுதி்் கண்டுபிடித்துவிடும் என்பது மிகப்பெரிய வெற்றி! ஒருவர் பேசி முடிப்பதற்குள்ளேயே திரையில் "இது தவறான தகவல்" என்று ஆதாரம் வந்துவிடும். இது பொய் பிரச்சாரங்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக் ஆகும். கல்லூரி மாணவர் 'இன்ட்ரூத்' என்ற பெயரில் ஒரு குரோம் நீட்டிப்பை உருவாக்கியுள்ளார். அது எந்தவொரு நேரலைப் பேச்சு, விவாதம் அல்லது நேர்காணலையும் கேட்கிறது.

ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்து வடிவில் மாற்றிவிடும். மேலும், ஒவ்வொரு கூற்றையும் உண்மையான ஆதாரங்களுடன் நிகழ்நேரத்தில் சரிபார்த்துவிடும். அரசியல்வாதியோ அல்லது விவாத்தில் பேசுபவரோ, ஒரு வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே இது நடக்கிறது. இது விவாதங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், மக்கள் சந்திப்புகள், நேர்காணல்கள் என காணொளியில் யாராவது பேசும் எதிலும் செயல்படுகிறது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உண்மைச் சரிபார்ப்பு உங்கள் திரையில் தோன்றும்.

முன்னதாக இதுவரை, உண்மைச் சரிபார்ப்பு பல மணிநேரங்கள் அல்லது நாட்கள் கழித்துதான் நடந்தது. அதற்குள், காணொளிப் பதிவு பகிரப்பட்டு, தலைப்பு எழுதப்பட்டு, பாதிப்பு ஏற்பட்டிருக்கும். திருத்தத்தை யாரும் படிப்பதில்லை. இன்ட்ரூத் அந்த இடைவெளியை நொடிகளாகக் குறைத்துள்ளதும். அவர் பேசியது உண்மையா பொய்யா என்ற உண்மைச் சரிபார்ப்பும் ஒரே நேரத்தில் நடக்கிறது. ஒரு கல்லூரி மாணவரின் ஐடியாவால், உருவான ஒரே ஒரு குரோம் எக்ஸ்டன்சன் மற்றும் அவரது ஏஐ மாடல் ஆகியவற்றின் மூலம் பல ஆண்டுகளாக செய்தி சேனல்களால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றை இப்போது செய்ய முடிகிறது. இந்தியாவிற்கு மட்டும் இதுவந்தால் பல அரசியல்வாதிகளின் பிழைப்பில் மண்ணை போட்டுவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+