கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங் நடந்ததா? நான் அப்போ எங்கே இருந்தேன் என்பது போலீசுக்கே தெரியும்! ஹெச் வினோத் ஓபன்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை பற்றி மீண்டும் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் மெர்சல் சம்பவத்தை 41 பேர் உயிரிழந்த சமயத்தில் கூட ஜனநாயகன் படம் சூட்டிங் செய்யப்பட்டது என்று பரவிய சர்ச்சைகளுக்கு இயக்குநர் எச் வினோத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் நடைபெற்ற விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர். அந்த சம்பவம் எப்படி நடந்தது? என்று இப்போதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
கரூர் சர்ச்சை
அதே நேரத்தில் அந்த சூட்டிங்கில் விஜய் வாகனம் மற்றும் சில வாகனங்களில் இருந்து ஷூட்டிங் செய்யப்பட்டது என்றும் அந்த சூட்டிங்கிற்காகத்தான் மக்களை அதிகமாக கூட்ட வேண்டும் என்று விஜய் தரப்பினர் முயற்சி செய்தார்கள் என்று பல குற்றச்சாட்டுகள் பரவி வந்தது. இது குறித்து முதல் முறையாக எச் வினோத் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் சொல்லும்போது கரூரில் நடந்த அந்த கூட்டத்தில் ஜனநாயகன் படப்பிடிப்பு நடந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். அதில் எந்த உண்மையும் கிடையாது.

இயக்குநர் ஹெச் வினோத் விளக்கம்
அதோடு அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நான் சென்னையில் இருந்தேனா? வேறு எங்காவது இருந்தேனா? என்பது காவல்துறையால் 20 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும். எல்லாமே பதிவுகளாக இருக்கும். அதனால் ஆதாரம் இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று அவர் பேசி இருக்கிறார். அதோடு சோசியல் மீடியாவில் பரவும் பொய்யான தகவல்கள் குறித்தும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.
ஜனநாயகன் போஸ்டர் கவனிச்சீங்களா? காத்திருப்புக்கு கிடைத்த பலன்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
அதில் ஒரு தேசமே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு பொய்யை சமாளிக்க இன்னொரு பொய் என்று போய்க்கொண்டு இருக்கிறது. அதற்காக ஐடி விங்குகள், வார் ரூம் என்று ஒரு கலாச்சாரமே உருவாகி விட்டது. ஒருவர் பொய் சொல்லி ஜெயித்துவிட்டால் அவரை தோற்கடிப்பதற்காக மற்றொருவரும் பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது.
பொய்க்கும் பொய்க்கும் சண்டை
இப்போது உண்மைக்கும், பொய்க்கும் சண்டை இல்லை. பொய்க்கும் பொய்க்கும் தான் சண்டை நடக்கிறது என்று அந்த பேட்டியில் ஹெச் வினோத் பேசியிருக்கிறார். அதோடு விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக வருவார் என்று நானே எதிர்பார்க்கவில்லை. பலரும் அவரை குறைத்து மதிப்பிட்டார்கள் ஆனால் மக்கள் வேறு ஒரு முடிவுக்கு எடுத்து இருக்கிறார்கள்.

முதல்வர் விஜய் சொன்ன ஆறுதல்
ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளி போனதும், படம் இணையத்தில் கசிந்ததும் தனக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக இருந்ததாகவும் அந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக கூப்பிட்டு ஆறுதல் சொல்லியதை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார்.
இந்த விளக்கம் வெளியான பிறகு விஜய் ரசிகர்கள் இந்த வீடியோக்களை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் பல மாதங்களாக கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங் நடந்தது என்று பரவி வந்த தகவலுக்கு இயக்குநர் ஹெச் வினோத் கொடுத்த விளக்கம் மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
