அன்னா ஹசாரே கற்று தந்த பாடம்.. கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு ராகுல் மவுனம் ஏன்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரடியாக களத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராகுல் இதுபோல நேரில் செல்லாமல் இருக்க காரணம் இருக்கவே செய்கிறது.. அதாவது அண்ணா ஹசாரே போராட்டத்தின் போது நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்ற பிறகே ராகுல் காந்தி நேரடியாக போராட்ட களத்திற்கு செல்லாமல் இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிக பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தது. காங்கிரஸின் யுபிஏ-2 அரசியில் பல ஊழல்கள் நடைபெறுவதாக சொல்லி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா ஹசாரே இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது.

Rahul Gandhi NEET CJP protest

அண்ணா ஹசாரே

அப்போது மத்திய அரசின் ஐந்து மூத்த அமைச்சர்கள் நேரடியாக அண்ணா ஹசாரே மற்றும் இந்தியா அகைன்ஸ்ட் கரப்ஷன் இயக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் உருவானது. அதன் விளைவாகவே ஆம் ஆத்மி கட்சி உருவாகி, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு போட்டியாக மாறியது. இந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்ற காங்கிரஸ், இந்த முறையும் அதே தவறை செய்ய ரெடியாக இல்லை.

அதனால்தான் நீட் உள்ளிட்ட தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தை முன்னிறுத்தி கரப்பான் பூச்சி கட்சி, மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை தீவிரப்படுத்த தொடங்கியபோது, காங்கிரஸ் தலைமை எச்சரிக்கையாக இதை அணுகியது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ரொம்பவே கவனமாக இதை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி

மாணவர்களின் பிரச்சினையை முன்வைத்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார். அப்படியிருக்கும் அவர் ஏன் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நேரில் சந்திக்கவில்லை என்ற கேள்வியைப் பலரும் எழுப்பினர். இங்கு தான் அண்ணா ஹசாரே பாடம் வருகிறது. அதாவது சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் நேரடியாக இணைந்தால், அது அந்த அமைப்புக்கு மிக பெரிய அரசியல் அங்கீகாரத்தை அளித்துவிடும் என்ற அச்சம் ராகுல் காந்திக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

அண்ணா ஹசாரே இயக்கம் பின்னர் ஆம் ஆத்மி கட்சியாக மாறியதைப் போல, கரப்பான் பூச்சி கட்சியும் எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கக் கூடும் என்ற கணிப்பும் காங்கிரஸ் தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு காங்கிரஸ் நின்றுவிட்டது.

ராகுல் முடிவு

காங்கிரஸ் சமீபத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கூட.. சோனம் வாங்சுக் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும், மாணவர்களின் பிரச்சனை நியாயமானது என்றும் ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இயக்கத்தின் அரசியல் முகமாக சோனம் வாங்சுக் அல்லது கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே இருக்கக்கூடாது.. காங்கிரஸே அரசியல் ரீதியாக இதை எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் காரணமாகவே சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை ஆதரித்தாலும், ராகுல் காந்தி நேரடியாக போராட்ட மேடைக்கு செல்லவில்லை. மாணவர்களின் பிரச்சனை நியாயமானது.. அதை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் அதேநேரம் இதன் அரசியல் பலன் அந்த அமைப்புகளுக்கு செல்லக் கூடாது என்பதில் காங்கிரஸ் மிகவும் கவனமாக இருப்பதையே இது காட்டுகிறது.

அந்த தவறை செய்யக்கூடாது

கடந்த காலத்தில் அண்ணா ஹசாரே இயக்கம் காங்கிரஸுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது வரை காங்கிரஸ் மீண்டு வர முடியாமல் போக அதுவே முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்பதாலேயே தற்போதைய மாணவர் போராட்டத்தை காங்கிரஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகுகிறது.. அதாவது மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தாலும், அது தனி அரசியல் சக்தியாக வளர்வதைத் தடுக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+