"பணிந்த" எடப்பாடி பழனிசாமி?.. பறந்த மெசேஜ்.. கிளம்பிய 2 அபாயம்.. சாய்ஸூம் இல்லை, சான்ஸூம் இல்லையாமே?
எடப்பாடி பழனிசாமிக்கு 2 முக்கிய நெருக்கடிகள் சூழ்ந்து வருவதாக கூறப்படுகிறது
சென்னை: 2 முக்கிய சிக்கல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிவருவதால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும், ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளாராம்..!!
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை இன்னமும் ஓயவில்லை.. ஓபிஎஸ் + சசிகலா + தினகரனை இணைத்துக் கொள்ள சிறிதும் விருப்பமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்..
ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளை எடப்பாடிக்கு சொன்னதாகவும், ஆனால், அப்போதுகூட எடப்பாடி அந்த பேச்சை காதில் வாங்கி கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது..

2 மேட்டர்கள்
இதைதவிர, கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வருகிறது. மேலும், நெடுஞ்சாலை துறை ஊழல்கள், சம்பந்தி தொடர்பான ஊழல்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. அதனால்தான், தன்னை காப்பாற்றும்படி, டெல்லி பாஜக தலைவர்களின் உதவியை நாடி எடப்பாடி பழனிசாமி சென்றதாகவும், ஆனால், எடப்பாடியை மேலிடம் கைவிட்டுவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்...

அஸ்திரம் A
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, இரு அறிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்படுவது முன்கூட்டியே அறிந்த விஷயம் என்பதால்தான், "எதிர்க்கட்சி துணை தலைவர்" என்ற விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.. 2 நாளும் அது தொடர்பான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டாலும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் தாக்கத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையைவிட, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைதான், மிகப்பெரிய குடைச்சலாக எடப்பாடிக்கு முன்நின்றுள்ளதாம்..

அஸ்திரம் B
ஏற்கனவே பாஜக கைவிட்டுவிட்ட நிலையில் வேறு வழியில்லாமல், ஓரளவு இறங்கி வர சம்மதித்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அதாவது ஓபிஎஸ்ஸுக்கு இணை பொதுச்செயலாளர் பதவியை தர போகிறாராம்.. இதற்காக முக்கிய நபரிடம் ஓபிஎஸ்ஸுக்கு தூதும் அனுப்பினாராம்.. ஆனால், ஓபிஎஸ் அதற்கு மறுத்துவிட்டாராம்.. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் சமமான பதவிகள்.. அதன்படி தான் இத்தனை காலமும் இருந்துள்ளோம்.. அதே பதவிகளே நீடிக்க வேண்டுமே தவிர, புதுஸா ஒன்றை கிளப்ப கூடாது.. முதலில், பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு முடிவுக்கு வரட்டும்" என்று பதிலளித்தாராம்.

மூவ் 1
இறங்கி வந்தும் பலனில்லாமல் போகிறதே என்று நொந்து போய் உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அதேபோல, தன்னிடம் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் ரகசிய பேச்சு நடத்திவருவதாக தகவல்கள் காதுக்கு எட்டியதால் கொதித்து போய்விட்டாராம் எடப்பாடி.. தென்மண்டலத்தில் மட்டும்தான், இந்த சதி வேலை நடப்பதாக சொன்னார்கள்.. இப்போது வடமாவட்டங்களிலும், அதிலும் மூத்த நிர்வாகிகளே இப்படி நடந்து கொண்டால் எப்படி? என்று புலம்ப ஆரம்பித்துள்ளாராம்.. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் எடப்பாடிக்கு பின்னடைவு ஏற்பட்டதில் இருந்தே, வடமாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் லேசாக மாற்றம் காணப்பட்டு வருகிறதாம்..

மூவ் 2
மேலும், இரட்டை இலையை முடக்கவும் வாய்ப்புள்ளது என்ற அரசல் புரசல் பேச்சுக்களும் அவர்களை லேசாக நடுங்க வைத்து விட்டதாம்.. அதனால்தான், ஓபிஎஸ் பக்கம் தூது அனுப்பி கொண்டிருக்கிறார்களாம்.. இவர்களை எப்படி தன்பக்கம் இழுத்து வைத்து கொள்வது என்பதுடன், ஓபிஎஸ்ஸை எப்படி சமாதானம் செய்வது, பாஜகவின் சப்போர்ட்டை எப்படி பெறுவது? தன்னை சுற்றி வரும் நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது என ஏகப்பட்ட இடியாப்ப சிக்கலில் எடப்பாடி திணறி வருவதாக கூறப்படுகிறது.. இதெல்லாம் சேர்ந்து அநேகமாக, எடப்பாடியை பணிய செய்துவிடும் சூழ உள்ளதாக சொல்கிறார்கள்.. ரத்தத்தின் ரத்தங்களுக்காக இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் சரி.. பார்ப்போம்..!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications