"டேஞ்ச்சரா" போச்சே.. இதான் பாஜக.. மிரண்ட எடப்பாடி டீம்.. இதுக்கு மேல தாங்காது போல.. அதென்ன 3வது அணி
எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் அட்வைஸ்கள் தந்து வருகிறார்களாம்
சென்னை: பொறுத்து பொறுத்து பார்த்த பாஜக, எடப்பாடி டீமை கழட்டிவிட்டுவிட்டு, 3வது அணி அமைக்க தீவிரமான முயற்சியில் இறங்கிவிட்டதாம்.. இதையடுத்து எடப்பாடி டீமில் சில முணுமுணுப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன.
தமிழகத்தில் இந்த முறை குறைந்தது 10 முதல் 15 சீட்டுகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், குறிப்பிட்ட சில தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் சைலண்ட்டாக வேகம் எடுத்துள்ளன..
அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், கட்சியே 2 ஆக உடைந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து அவருடன் எடப்பாடி செல்வாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது..

மாஸ் A
இப்போது போலவே பிடிவாதம் தொடர்ந்தால், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது. எனவே 3வது அணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும், முடிந்தவரை எடப்பாடி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகிறது.

மாஸ் B
இதற்காக, ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது பாஜக தலைமையில் திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து மும்முனைப் போட்டியை ஏற்படுத்துவது என்ற 2 வித மாஸ் வியூகங்களையும் இஎடுத்துள்ளதாம். இதுகுறித்து தீவிர ஆலோசனையும் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. அதிமுக விவகாரங்களில், இரட்டை இலையை முடக்கினாலும், தங்களுக்கு ஒருவகையில் அது நல்லது என்றே பாஜக நினைக்கிறதாம். கொங்கு மண்டலத்தில் பாஜக ஓரளவு வலுவுள்ள நிலையில், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் போன்றோர் கொங்குவை தாங்கி பிடிக்கும் நிலையில், தென்மண்டல வாக்குகளை வளைத்து போடுவதற்காகவே ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் போன்றோரே போதும் என்று பாஜக கணக்கு போடுகிறதாம்..

சீரியஸா போச்சே
இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட எடப்பாடி தரப்பு சீனியர்கள் சிலர், அதிர்ந்து விட்டார்களாம்.. காரணம், இரட்டை இலையை பாஜக முடக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஆனால், இலை இல்லாமல் அதிமுகவில் அரசியல் செய்ய முடியாது.. இலையே போய்விட்டபிறகு கட்சியில் செல்லாக்காசாக்கிவிடுவோமே என்ற கலக்கம் சூழ்ந்துள்ளதாம்.. எடப்பாடியை நம்பி, ஏகப்பட்ட செலவுகளை செய்து ஒருசிலர், கையை பிசைந்து வருகின்றனர்.. அதனால், ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளுங்கள் என்று எடப்பாடியிடம் கோரிக்கையை விட ஆரம்பித்துவிட்டார்களாம்.

அட்வைஸ்கள்
அனைவரையுமே ஓரங்கட்டுவதால், நாளைக்கு பிரச்சனை அதிகமாகிவிடும், பாஜகவும் கைவிட்டுவிட்டால், இன்னும் சிக்கலாகும் என்று எடுத்து சொல்லி வருகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, பாஜக மேலிடத்தின் ஆசி இருந்ததால்தான், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் இருந்தே ஓரங்கட்டி முடிந்தது, இன்று பாஜகவையே மதிக்காமல் போய்விட்டால், அனைவரது எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் எடுத்து சொல்லி வருகிறார்களாம்.. ஓபிஎஸ் விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வாங்க என்று எடப்பாடிக்கு அட்வைஸ்கள் சொல்ல ஆரம்பித்துள்ளதும், ஒருசிலர் ஓபிஎஸ் தரப்பிடம் தூது விட ஆரம்பித்துள்ளதும் எடப்பாடி தரப்புக்கு ஜெர்க்கை தந்து வருகிறது.

ஹைலைட்
ஒருவேளை எடப்பாடியே இறங்கிவந்தாலும், இதற்கு அவருடன் இருக்கும் சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி போன்றேர் பாஜகவை மனமுவந்து ஏற்பார்களா? என்று தெரியவில்லை. அதேபோல, எடப்பாடியை ஓபிஎஸ் ஏற்பதாக சொன்னாலும், அவருடன் இருக்கும் வைத்திலிங்கம் போன்றோர் இதற்கு சம்மதிப்பார்களா என்று தெரியவில்லை.. இரு டீமுக்குள்ளும் குழப்பங்கள் நீடித்து வந்தாலும், எடப்பாடிக்கே அட்வைஸ்கள் பறந்துள்ளதுதான் ஹைலைட் திருப்பமாக உள்ளது..!!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications