அடுத்த திட்டம் என்ன.. ரஜினியுடன் எப்போது இணைவார்?.. மநீம மீட்டிங்கில் கமல்ஹாசன் பரபரப்பு பதில்!
ரஜினியுடன் எப்போது இணைவேன் என்று சொல்ல முடியாது, ஆனால் தமிழகத்திற்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ரஜினியுடன் எப்போது இணைவேன் என்று சொல்ல முடியாது, ஆனால் தமிழகத்திற்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்பேன். அதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும்.
நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், மக்கள் நலனுக்ககாக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார். அரசியலில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

என்ன பேசினார்
இந்த நிலையில் இன்று மநீம கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அதில், ரசிகர்கள் கைதூக்கி விட்டதால் நான் இங்கே நிற்கிறேன். கட்சி உறுப்பினர்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. இந்த அன்பை நான் செயல் வடிவமாக, ஆக்கபூர்வமாக மாற்றுவேன். இதே அன்பை நான் தமிழகத்திற்கு கொடுப்பேன்.

இனி மேல் எப்படி
இனி வரும் காலங்களில் என்ன மாற்றம் நடக்கும் என்று பார்ப்பீர்கள்.நாங்கள் அரசியலுக்கு வந்த பின் வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்துவேன். வார்த்தைகள் மீது நாங்க நம்பிக்கை வைக்க மாட்டோம். நாங்கள் செயலில் காட்டுவோம்.

எப்போது இணைவேன்
ரஜினியுடன் எப்போது இணைவேன் என்று சொல்ல முடியாது. நாங்கள் எப்போது இணைவோம் நீங்கள் எதிர் பாருங்கள். தமிழகத்திற்காக இணைவோம். நானும் ரஜினியும் தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவோம்.

கைகள் இணைய வேண்டும்
அனைவரின் கைகளும் இணைய வேண்டும். நட்பை விட எங்களுக்கு முக்கியம், தமிழக நலன். எங்கள் இணைப்பின் அவசியமே அதுதான். தமிழக மக்களுக்கு அவசியம் என்றால் கண்டிப்பாக நாங்கள் இணைந்து பணியாற்ற தயார், என்று குறிப்பிட்டார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications