2 வாரங்கள் தாமதமாகும் வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் எப்போது தெரியுமா?.. வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 வாரங்கள் தாமதமாகி தொடங்கும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. செப்டம்பர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இது மார்கழி மாதத்திற்குள் முடிவடையும். இதுதான் வழக்கம். வடகிழக்கு பருவமழை மூலம் தமிவகமும் புதுவையும் பயன் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது என்பது குறித்து இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டிருந்தது. அதன்படி வரும் 20 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது இந்த முறை மழை இயல்பாக இருக்கும். சராசரியாக இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3 சூறாவளி புயல்கள் காணப்படுகின்றன.

வானிலை மாதிரி

வானிலை மாதிரி

வானிலை மாதிரிகளின் அடிப்படையை வைத்து பார்த்தால் வடஆந்திரா, ஒடிசா, வங்கதேசம், மேற்கு வங்கம் அருகே புயல்கள் கரையை கடக்கும். தமிழகத்தை புயல் தாக்குவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது என்று சொல்லப்பட்டது. மேலும் வார இறுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மையம்

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இரு வாரங்கள் தாமதமாக தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 4ஆவது வாரம்

அக்டோபர் 4ஆவது வாரம்

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: அக்டோபர் 4ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். 2 ஆவது வாரம் தொடங்கவிருந்த பருவமழை 2 வாரங்கள் தாமதமாக தொடங்கும். கணினி மாதிரி தரவு அடிப்படையில் 2 வாரங்கள் தாமதமாக பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+