Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாட்சாத் திமுக.. வைத்திலிங்கத்தை விடாதீங்க.. ஓபிஎஸ் கைதாகலயே.. சரவெடியை "அறிவாலயம்" பக்கம் வீசிய தலை

ஓபிஎஸ்ஸை எப்போது கைது செய்யப்படுவார் என்று அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைத்திலிங்கத்தையும், ஓபிஎஸ்ஸையும் ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று புதுச்சேரி அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன், இதுக்கெல்லாம் காரணம் திமுகதான் என்றும் ஒரு புது குண்டை தூக்கி அறிவாலயம் பக்கம் வீசியுள்ளார்.

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்.. இவர் தீவிரமான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்.. அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்து வருகிறார்.

அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து, செய்தியாளர்களிடம் ஓபிஎஸ்ஸை கடுமையாக இவர் பேசியிருந்தார்..

 ஓபன் அட்டாக்

ஓபன் அட்டாக்

ஒவ்வொரு முறை பிரச்சினையின்போதும் கோர்ட்டை நாடி கட்சியை பலவீனப்படுத்தி வருகிறார்.. அதிமுகவுக்கு அவப்பெயரைத் தேடித் தந்த ஓபிஎஸ், தன்னுடைய தொண்டர்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தியிருந்தார்.. அதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றத்தின் உறுதி செய்யப்படாத தீர்ப்பை கையில் வைத்துக்கொண்டு, இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைப்பது, அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம்.. ராணுவக் கட்டுப்பாடு மிகுந்த அதிமுகவில் தன் சுயநலத்துக்காக பலமுறை பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தியவர் ஓபிஎஸ் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

 112 டாக்குமெண்ட்கள்

112 டாக்குமெண்ட்கள்

இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அன்பகன்.. மீண்டும் ஓபிஎஸ் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.. அப்போது, எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் துணையோடுதான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னுடைய அடியாட்களுடன் உள்ளே நுழைந்தார்... அலுவலகத்தை அடித்து உடைத்து அங்கிருந்த சொத்து பத்திரங்கள், விலை மதிப்பில்லாத பொருட்களை திருடிச்சென்றார்கள்.. இது குறித்து நடந்த விசாரணையில் திருடப்பட்ட 112 பொருட்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசாரே சொல்லிவிட்டனர்.

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

ஆனால், திருட்டு புகாருக்கு ஆளான ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட யாரையும் போலீசார் இதுவரைக்கும் கைது செய்யவில்லை. .. இதன் மூலமாகவே திமுகவின் சதி செயல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.. கழகத்தை அழிக்க நினைக்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்... கழகத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்யும் துரோகிகளை எடப்பாடியார் துவேஷம் செய்வார்.

 இரும்பு கரம்

இரும்பு கரம்

தமிழகத்தில் தொடர்ச்சியான பெட்ரோல் குண்டு வீச்சால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் தமிழகத்தை உற்றுநோக்கும் நிலையை ஸ்டாலின் உருவாக்கி விட்டார். காரைக்காலில் ஒரு வாரத்திற்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் யார் தவறு செய்ததாலும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது காவல்துறையினர் கடமையாகும்.

டிஜிபி

டிஜிபி

அதனால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிரவாத செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்களை கண்காணிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும். அது டிஜிபி தலைமையில் இயங்க வேண்டும். இது சம்பந்தமாக துணைநிலை ஆளுநரும், முதல்வரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாநிலத்தில் அமைதியை கெடுக்கும் எந்த சக்திக்கும் சிறிதளவு இடமும் கொடுக்கக்கூடாது" என்று காட்டமாக கூறியுள்ளார் அன்பழகன்.

 திமுகவா?

திமுகவா?

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை போலீசார் ஏன் இதுவரைக்கும் கைது செய்யவில்லை, இதன் மூலமே திமுகவின் சதிச்செயல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று அன்பழகன் கூறிய இதே குற்றச்சாட்டைதான், எடப்பாடி தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.. ஆனால், இதற்கு பலமுறை திமுகவின் மூத்த தலைவர்கள் விளக்கம் தந்தும், மீண்டும் அதே பல்லவியை எடப்பாடி டீம் கையில் எடுத்துள்ளது.. ஆனால், இதுவரை ஓபிஎஸ் இந்த விமர்சனம் குறித்து கருத்து எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+