புஸ்ஸூனு போச்சே.. அப்பாயிண்மென்ட்டே "அவருக்கு" கிடைக்கலயாமே.. பார்ரா.. "தலயே" இறங்கிட்டாரே..அப்ப ஓகே
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரஉள்ள நிலையில், பன்னீர்செல்வம் கூடாரமே டென்ஷனில் எகிற உள்ளதாம். இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
கடந்த 6 மாத காலமாகவே, தனக்கு நேர்ந்த அடுத்தடுத்த சறுக்கல்களாலும், தொடர் சட்டப்போராட்டங்களில் கிடைத்த பின்னடைவுகளாலும், நொந்து போயுள்ளாராம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.
இடைத்தேர்தல் விவகாரத்திலும், மேலிடம் எப்படியும் தன்னை கைவிடாது என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், தன்னை கண்டுகொள்ளாமல் விடப்பட்டது, மிகுந்த வேதனையை அப்போது ஓபிஎஸ்ஸுக்கு தந்ததாக சொன்னார்கள்..
போட்டிகள்: இத்தனைக்கும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியும், வழிவிட்டும், ஆதரவு தந்தும், வேட்பாளரை வாபஸ் பெற வைத்தும் என அத்தனை சாதகமான விஷயங்களை செய்தும்கூட, பாஜக மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்று ஓபிஎஸ் வருத்தப்பட்டாராம்..

"டெல்லியை (பாஜக) நம்பி ஏமாந்துவிட்டேன். என்னை அவர்கள் கைவிட்டு விட்டனர்" என்று அந்த சமயத்தில், சசிகலா, தினகரன் தரப்பினரிடம் புலம்பித் தீர்த்தாராம் ஓபிஎஸ்.. அதுபோலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கூட இதனை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ்.. ஓபிஎஸ்ஸின் இந்த புலம்பல், டெல்லிக்கும் எடுத்து சொல்லப்பட்டதாகவும், விரைவில் ஓபிஎஸ்ஸை அழைத்து பேசி சமாதானம் செய்யக்கூடும் என்றெல்லாம் செய்திகள் கசிந்தன.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுவந்தபிறகு, ஓபிஎஸ்ஸூம் டெல்லி கிளம்பி செல்வதாக தகவல் வெளியானது.. இதை 2 முறை மூத்த தலைவர் வைத்திலிங்கமும் செய்தியாளர்களிடமே சொல்லியிருந்தார்.. அதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி, சென்னை வரும்போது, நிச்சயம் ஓபிஎஸ்ஸை தனியாக அழைத்து பேசுவார் என்றும் நம்பப்பட்டது.. தனிப்பட்ட முறையில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
சோழா ஓட்டல்: இப்போதும் மேலிடத்தின் மீதான நம்பிக்கையை ஓபிஎஸ் தரப்பு கைவிடவில்லை.. இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்.. வழக்கமாக தங்கும், ராஜ்பவனில் அவர் தங்கவில்லை. சோழா ஹோட்டலில் தங்குவதாக தெரிகிறது.. இதனால், இன்று எப்படியாவது அமித்ஷாவை சந்தித்து விட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் முயற்சித்துவருகின்றனர்..
ஆனால், இதற்கு சரியான ரிப்ளை இல்லாததால், அண்ணாமலையின் உதவியை ஓபிஎஸ் நாடியிருக்கிறாராம்.. உடனே, ஓபிஎஸ்ஸூக்காக, பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷிடமும் பேசியிருக்கிறார் அண்ணாமலை...
அப்பாயிண்மென்ட்: அதற்கு சந்தோஷ் அண்ணாமலையிடம், " வேலூரில் நடக்கும் 9 வருட சாதனைக் கூட்டத்துக்கு வருவதற்கு மட்டும்தான் ஒப்புக்கொண்டிருந்தார் அமித்ஷா.. ஆனால், தமிழக பாஜகவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க வேண்டும் என திடீர் முடிவால் தால் முதல்நாளே சென்னைக்கு அவர் வருவது போல திட்டமிடப்பட்டது. உங்கள் மீது உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் மீதும் பல அதிருப்திகள் உள்ளன..
இதையெல்லாம் சரிசெய்யத்தான் அவரது பயணத்தில் பல விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. அதனால், பாஜக அல்லாத நபர்களை சந்திக்க நேரம் ஒதுக்க அமித்ஷா ஒப்புக்கொள்வாரா?ன்னு தெரியவில்லை" என்றாராம் சந்தோஷ்..
அதற்கு அண்ணாமலை, "அமித்ஷாஜி, ஹோட்டலில் தங்குகிறார்.. அங்கு ஒரு 10 நிமிடம் ஓபிஎஸ் சந்திக்க நேரம் பெற்றுத்தாருங்கள். என்னிடம் உதவி கேட்டுவிட்டார். அதான்..." என்று சொல்ல, "முயற்சிக்கிறேன்" என்று மட்டும் சொன்னாராம் சந்தோஷ்.
எகிறும் டென்ஷன்: ஆனால், இன்று காலை வரை ஓபிஎஸ்ஸூக்கான அப்பாயிண்மெண்ட் உறுதியாகவில்லை என்று கமலாலய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இன்னும் நைட் வரை டைக் இருக்கிறதே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications