பிஎம் கிசான் 23-வது தவணை எப்போது? அரசின் ரூ.2000 பெற விவசாயிகள் உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்
சென்னை: பிஎம் கிசான் திட்டத்தின்படி, மத்திய அரசு ஆண்டுக்கு 6,000 ரூபாயை தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாகத் தகுதியுள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.. எதிர்பார்க்கப்படும் 23-வது தவணையானது வரும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படலாம் என்ற உறுதிபடுததப்படாத தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. எனினும் தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெற முடியும் என்பதால், விண்ணப்பிக்கும் முன் தகுதிகளைச் சரிபார்ப்பது அவசியமாகும்..!!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

பிஎம் கிசான் திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த மொத்தத் தொகையானது 2,000 ரூபாய் வீதம் மூன்று சம தவணைகளாகப் பிரிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
கடந்த மார்ச் 13, 2026 அன்று பிரதமர் மோடி 22-வது தவணையை அசாமின் குவஹாத்தியில் இருந்து விடுவித்தார். தற்போது 23-வது தவணையை எதிர்பார்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்தத் தவணையானது வரும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்க காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் தவணை எப்போது
இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.. காரணம் இந்தத திட்டத்தில் நிதியுதவியைப் பெறுவதற்கு இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை முடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படாத விவசாயிகளின் கணக்குகளுக்கு அடுத்த தவணைத் தொகை வந்து சேராது என்று அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் எந்தவிதாமான தடங்கல்களும் இல்லாமல் பணம் வங்கிக்கு வந்து சேர, முடிந்தவரை விரைவாக இந்தச் சரிபார்ப்புப் பணியை முடித்துவிடுவது நல்லது என்கிறார்கள்.
விவசாயிகளுக்கு நிதியுதவி
இந்த சரிபார்ப்பை மூன்று எளிய வழிகளில் செய்துகொள்ளலாம். முதலாவதாக, பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று, உங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் சரிபார்ப்பை முடிக்கலாம்.
2வதாக ஆதார் இணைப்பு ஆகும்.. ஒருவேளை உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பொதுச் சேவை மையத்திற்கு சென்று கைரேகையைப் பதிவு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். மூன்றாவதாக, பிஎம் கிசான் செயலியை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து, முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே சரிபார்ப்பை முடித்துக்கொள்ளலாம்.
ஆவணங்கள் சரிபார்ப்பு
தங்களுக்கான தவணைத் தொகை என்ன நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் விவசாயிகள், பிஎம் கிசான் இணையதளத்தில் உள்ள விவசாயிகள் பிரிவு பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு Beneficiary Status அதாவது பயனாளிகள் நிலை அல்லது Know Your Status என்ற ஆப்ஷனை தேர்வை அழுத்தி, உங்கள் பதிவு எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு Get Data என்ற தரவைப் பெறுக என்ற பட்டனை அழுத்தினால், உங்கள் தவணைத் தொகை தொடர்பான முழுமையான விவரங்கள் ஸ்கிரீனில் தோன்றும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவி, விவசாய நடவடிக்கைகளுக்கும் இதர குடும்பத் தேவைகளுக்கும் விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்பதால், அனைவரும் உரிய நேரத்தில் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..!












Click it and Unblock the Notifications