வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை.. 12 மாவட்டங்களில் இன்று பிச்சு உதறப் போகுது கனமழை.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இடையிடையே மழை பெய்வதால் சற்று வெப்பம் தனிந்து வருகிறது. இன்றும் கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திருப்பூர் உள்பட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் மழைக்கும் வாய்ப்பு உள்ளது அதே நேரம் வெயிலும் வாட்டி வதைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இன்றும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை
மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நாளை 8 மாவட்டங்களில் கனமழை கொட்டும்
நாளை 26 ஆம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
வரும் 27 ஆம் தேதி முதல் 29-05-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-05-2026 மற்றும் 31-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
25-05-2026 முதல் 29-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும், சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் மிதமான மழைக்கு சான்ஸ்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (25-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படக்கூடும்.
நாளை (26-05-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30·31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
25-05-2026 முதல் 29-05-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
25-05-2026 முதல் 27-05-2026 வரை: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28-05-2026 மற்றும் 29-05-2026: அந்தமான் கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
சூறாவளிக்காற்று 25-05-2026: கேரளம் கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26-05-2026 மற்றும் 27-05-2026: கேரளம் கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ராசிபுரம் (நாமக்கல்) 11, காங்கேயம் (திருப்பூர்) 9, செட்டிகுளம் (பெரம்பலூர்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி) தலா 7, ஆனைப்பாளையம் (கரூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெத்தை (நீலகிரி), மேட்டூர் (சேலம்) தலா 6, தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), ஓகேனக்கல் (தர்மபுரி), குன்னூர் PTO (நீலகிரி), சங்கரி துர்க்கம் (சேலம்), ஈரோடு PTO (ஈரோடு). குன்னூர் AWS (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), மேட்டூர் AWS (சேலம்), குண்டடம் (திருப்பூர்) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.
பூதலூர் (தஞ்சாவூர்), கின்னக்கோரை (நீலகிரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), மாயனூர் (கரூர்), கிணத்துக்கடவு (கோவை). வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), அம்மாபேட்டை (ஈரோடு). பென்னாகரம் (தர்மபுரி), தாளவாடி (ஈரோடு), பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 4, TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பல்லடம் (திருப்பூர்), தாராபுரம் (திருப்பூர்), தளி (கிருஷ்ணகிரி), சென்னிமலை (ஈரோடு), மோகனூர் (நாமக்கல்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), சாத்தியார் (மதுரை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), சோலையார் (கோவை) 3 செமீ மழை பதிவாகியுள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications