Meenam: மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்.. பணம், சொத்து, வெற்றி தேடி வரும்!
Meenam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீன ராசி பலன் (Meenam Rasi Palan)
மீன ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டம். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகம், வியாபாரம், தொழில் போன்ற அற்புதமான அமைப்புகள் உண்டாகும். ஏற்றமும், அனுகூலமும் நிறைந்த காலகட்டம். அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், பயணங்கள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். லாபம் நன்றாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. அனுகூலங்கள் காணப்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் உண்டாகும். நம்பிக்கையும், அனுகூலமும் காணப்படும்.
சிக்கல் தீரும்
வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். முயற்சிகளில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். பெரிய அளவுக்கு வெற்றிகள் ஏற்படும். வீடு, நிலம், சொந்தம், சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. கழுத்து வலி, கை வலி, கையில் அடிபடுவது, கால்சியம் குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும்.
வழிபாடு
பொருளாதாரம், சுக ஸ்தானம் நன்றாக இருக்கும். வீட்டை விரிவுபடுத்துவது, லிஃப்ட் போடுவது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள். நிறைய பிரச்சனைகள் ஓயும். தைரியம் ஏற்படும். சொந்த பந்தங்கள் உங்களை நாடி வருவார்கள். ருத்திரன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ராசியான நிறம் மஞ்சள். சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications