2002ல் 1 கோடினு சொன்னீங்களே! 25 வருஷம் கழிச்சும் அதே தானா? தங்கம் என்ன விலை? ட்ரோலான லதா ரஜினிகாந்த்
சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் தான் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பேன் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் நிச்சயமாக சொன்ன தொகையை தருவார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் தருவதாக சொல்லிவிட்டு, தற்போது வரை அதே ஒரு கோடியைத் தான் தருவேன் என்று சொல்லுவது கஞ்சத்தனம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
'மக்கள் மேடை' அமைப்பு சார்பில் பாரத சேவா இணையதள தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் நடைபெற்றது. ஶ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் 'மக்கள் மேடை' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.
லதா ரஜினிகாந்த்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த்," இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக அமைப்பை கட்டியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.
ரஜினிகாந்த்
பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிகளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே 'மக்கள் மேடை' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று எல்லாவற்றையும் விட பெரியது. ரஜினிகாந்தின் ஆதரவை விட ஆசீர்வாதம் தான் எங்களுக்கு முக்கியம். காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக 2002ஆம் ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
காவிரி இணைப்பு
ரஜினிகாந்த் கடந்த காலத்தில் தெரிவித்த கருத்து இது. இது ஒரு அரசியல் கேள்வி, காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நடக்கிறதோ, அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக செய்வார். ரஜினிகாந்த் 100 சதவீதம் எனக்கு ஆதரவு அளிக்கிறார். அவருடைய ஆதரவை விட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம்” என கூறியிருந்தார்.
ஒரு கோடி விவகாரம்
தற்போது இதை வைத்துதான் லதா ரஜினிகாந்த்-ஐ நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காவிரி நதிநீர் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது அதாவது 2002ல் நதிநீர் இணைப்பே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எனவும், நதிகளை இணைத்தால் ஒரு கோடி ரூபாய் தருவேன் என சொல்லி இருந்தார் ரஜினிகாந்த். அவர் சொல்லி கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கடந்துவிட்டது.
தங்கத்தின் விலை
சொல்லப்போனால் 25 ஆம் ஆண்டு வரப்போகிறது. ஆனால் தற்போது வரை ரஜினி அந்த ஒரு கோடி ரூபாயை தரவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் தருவேன் என சொன்னபோது ஒரு கிராம் தங்கத்தின் விலை 500 ரூபாய். ஆனால் தற்போது இந்த 25 ஆண்டு காலத்தில் தங்கத்தின் விலை பல மடங்கு எகிறி விட்டது. ஒரு சவரன் ஒன்றரை லட்சத்துக்கு மேல் சென்று விட்டு நிலையிலும், இப்போதும் அதே ஒரு கோடியைத் தான் தருவேன் என சொல்வது என்ன நியாயம் என லதா ரஜினிகாந்த் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள் .
நதிகள் இணைப்பு
இது ஒருபுறம் இருக்க ரஜினிகாந்த் தரப்பில் இன்னொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதாவது 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் தருவேன் என சொன்னபோது அதன் மதிப்பு மிக அதிகம். தற்போது நதிகள் இணைப்பு என்ற விஷயத்தை முன்னேடுத்தால் அதைவிட பல மடங்கு அதிக தொகையை ரஜினிகாந்த் தருவார். ஆனால் எந்த அரசு அதை முன்னெடுக்க போகிறது என கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications
