கிளைமாக்ஸ் இன்று.. "அவர்" சசியை சந்திக்க போறாராமே.. அதுவும் சேலத்திலேயே.. அதிமுகவில் ஒரே டென்ஷன்
எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளார் சசி
சென்னை: இன்றைய சூழலில் இரு விதமான முடிவுகளில், சசிகலா தரப்பு ஈடுபட்டு வருகிறது.. இதனால் அதிமுக மேலிடத்தில் ஒருவித பதற்றமும், எதிர்பார்ப்பும் சூழ்ந்து கொண்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் அளவுக்கு அதிகமான பொறுமையை கையில் எடுத்து வருகிறார்.. அவரை தன் பக்கம் இழுத்து வரும் முயற்சியையும் விடாமல் மேற்கொண்டு வருகிறார்..
அதேசமயம், அதிமுகவின் அதிருப்தி தலைவர்களையும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, இதற்காகவே சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

ஆதரவாளர்கள்
தன்னுடைய சுற்றுப்பயணங்களில் சசிகலா அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்தித்து வருவதையும், இனி சந்திக்க போவதாக உள்ள பிளான்களையும் கேள்விப்பட்டு, அப்படியே உறைந்துபோய் உள்ளது அதிமுகவின் கட்சி மேலிடம்.. அதை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்ற ஆலோசனையிலும் எடப்பாடி தரப்பு இறங்கியது. ஆனால், பெரிய அளவில் அதில் பலன் கிட்டவில்லை.. சசிகலாவின் காய் நகர்த்தல் வெற்றிகரமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஸ்டிராங் கோட்டை
எடப்பாடியின் கோட்டையான சேலத்துக்குள் சசிகலா புகுந்துள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரான தன்னை அதிமுக பொதுக்குழு நீக்கியது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த வழக்கை எதிர்த்துதான், ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்றத்தில் 40-தாவது ஐட்டமாக இந்த வழக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.. வழக்கு யாருக்கு சாதகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று மதியம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

தீயாய் தினகரன்
எனினும் ஒருவேளை தீர்ப்பு பாதகமானால் அடுத்தது என்ன செய்வது என்று சசிகலா தரப்பும், எடப்பாடி தரப்பும் முன்னதாகவே, கூட்டிக் கழித்து கணக்கு போட்டுவிட்டனவாம்.. இவர்கள் கணக்கு எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. ஆனால், இவர்களை தவிர, வழக்கின் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்று டிடிவி தினகரன்தான் அதிகமாக உற்று நோக்கி கொண்டு இருந்தார்.. அவரும் இனிமேல் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.

நடுநிலையாளர்
இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மாஜிகள் சிலரிடம் பேசியிருக்கிறார் சசிகலா. அப்போது, சசிகலா தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் இடையே ஒருங்கிணைக்கும் பணிகளை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த ஒரு நபரை தேர்ந்தெடுங்கள்.. அந்த நபர் நடுநிலையாளராக இருந்தால் சரியாக இருக்கும் என்று சசிகலாவிடம் மாஜிக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நடுநிலையாளராக போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

நீதிபதி யார்?
தீர்ப்பு எப்படி அமைகிறது என்பதை பொறுத்து, ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை நடத்த அந்த நடுநிலையாளர் நியமிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து தூது அனுப்பியிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது இந்த தூது. அப்போது, சேலத்திற்கு வரும்போது நேரம் அமைந்தால் ஏதேனும் ஒரு பொது இடத்தில் சந்திக்கலாம் என சசிகலா தரப்பிலிருந்து அவருக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. சசிகலா சேலம் வரும்போது இந்த சந்திப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் சசி முகாம்வாசிகள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications