மணிக்கு 200 கி.மீ. வேகம்.. சென்னை ஐசிஎப்-ன் அதிவேக வந்தே பாரத் ரயில் வருது.. தமிழ்நாட்டுக்கே ஹேப்பி
சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. அதனால்தான், இங்கு இப்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஐசிஎப்: அந்தவகையில், வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவையும் இந்த ஐசிஎப் பெற்று வருகிறது.. இதன் அடுத்தடுத்த விரிவாக்கமும் நடந்து வருகிறது.. 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன... வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
வந்தே பாரத்: இதைத்தவிர, 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.. இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதில் வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை, அடுத்த 5 வருடங்களில் 400 வந்தேபாரத் ரயில்களை இயக்கரயில்வே திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர, வந்தே மெட்ரோ, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத், பார்சல் வந்தே பாரத் ஆகிய ரயில்களையும் அடுத்தடுத்து தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வே திட்டம்: இந்நிலையில் இன்னொரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. அதாவது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் சொன்னதாவது:
பெங்களூரில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான, பி.இ.எம்.எல். நிறுவனத்தில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் முதல் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பயன்பாட்டுக்கு வந்தவுடன், சென்னை ஐசிஎஃப்பிலும் படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில் தயாரிக்கப்பட உள்ளது.
புதிய வேகம்: வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் தற்போது செல்லும்நிலையில், 160 கி.மீ.வேகத்திலும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான, பாதைகள் மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதுபோலவே, அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான, ஆரம்பக்கட்ட பணிகளும் ஆரம்பமாகி உள்ளன..
ரயில்பாதை: குறிப்பாக, ரயில்பாதை மேம்பாடு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.
இதற்கான, ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரிக்க உள்ளது.
இந்த ரயில் பெட்டிகளில் முக்கியமானதாக இருக்கும் "போகி" எனப்படும் அடிச்சட்டம் தயாரிப்பு குறித்து, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி,அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ள உள்ளோம்" என்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications