வருகிறது பழைய ஓய்வூதிய திட்டம்? வேகம் எடுத்த வேலை.. அரசு ஊழியர்கள் குழுவை.. சந்திக்கும் அமைச்சர்கள்
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்துப் பேச, ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
அரசு தரப்பில் வெளியான செய்திக்குறிப்பின்படி, இந்தக் கலந்துரையாடல் 2025 டிசம்பர் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாகப் பேசப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டம்
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், அகவிலைப்படியும் (DA) அவ்வப்போது திருத்தப்படும். இது ஓய்வுக்குப் பின் ஊழியர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
தமிழக அரசின் திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த ஜனவரி 1, 2004 முதல், புதிய அரசு ஊழியர்களுக்கு OPS திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய ஓய்வூதிய முறை (NPS) அறிமுகப்படுத்தப்பட்டது. NPS என்பது சந்தை அடிப்படையிலான பங்களிப்புத் திட்டமாகும், இதில் ஓய்வூதியம் முதலீடுகளின் சந்தை செயல்பாட்டைப் பொறுத்தது. சமீபத்தில் சில மாநிலங்கள் OPS திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில், 2004-க்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இருப்பினும், இது பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், ஸ்டாலின் அரசு விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது போன்ற பிற வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இதற்கான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பல்வேறு சலுகைகள் மற்றும் பிற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல்- Old Pension Scheme
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. OPS திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களுடன் இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பாரம்பரியமாக அதிகம். ஆனால், தற்போதைய ஆட்சியில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. இதனால் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்குச் சென்றது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களின் மனதை திருப்திப்படுத்தும் வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications