10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தேர்தலால் நடக்கும் மாற்றம்.. அட்டவணை எப்போது வெளியாகும்?
சென்னை: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் வரும் கல்வியாண்டில் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.பொதுவாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் எப்போது என்பது இந்நேரம் எல்லாம் வெளியாகி இருக்கும். ஆனால் 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதால், முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆண்டு தேர்வு பட்டியல் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க போகிறது. இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் இறுதியில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தவெக, பாஜக, பாமக, நாதக, உள்பட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த முறை தேர்தலில் மூன்று முனை போட்டியா அல்லது நான்கு முனை போட்டியா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இது ஒருபுறம் எனில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஆண்டு தேர்வை வரும் கல்வியாண்டில் முன்கூட்டியே நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் பள்ளி கல்வித்துறை இருக்கிறது. ஏனெனில் ஆசிரியர்கள் தான் பொதுவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.. அத்துடன் தேர்தல் நேரத்தில் பள்ளிகளில் தேர்வுகள் நடந்தால் மாணவர்களையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் தேர்வுகள், தேர்தலுக்கு முன்கூட்டிய நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
இந்நிலையில் பொதுவாகவே 10ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வுகளை எழுதுவார்கள். எனவே அவர்கள் அதற்கு தயாராகும் வகையில் ஆண்டு தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் வெளியாகலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வை நடத்த இருக்கும் அரசு தேர்வுத்துறை, பொதுத்தேர்வு தொடர்பான அட்டணைகளை தயாரித்து, அதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்துள்ளார்கள். அதன்படி, தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பபடுகிறது.
தமிழ்நாடு 2026-ல் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என சொல்லப்படும் சூழலில், அதற்கேற்ப பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த அட்டவணை உறுதிசெய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை வசம் வந்துசேரும் என்றும், அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அட்டவணையை அதிகாரப்பீர்வமாக வெளியிடுவார் எனவும், அதன்படி, நவம்பர் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.
முன்னதாக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி முடிந்தது. அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெற்றது. இடையிலேயே 11ம் வகுப்பு தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. அதேபோல் மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் தேர்வுகளை முடித்துவிட்டன. அரசு பள்ளிகளுக்கு மட்டும் இரண்டு தேர்வுகள் தேர்தல் முடிந்த பின்னர் ஏப்ரல் 20க்கு பிறகு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை தேர்தலுக்கு முன்பே அனைத்து தேர்வுகளும் முடிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications