கைமீறி போயிடுச்சே.. அன்று ஓபிஎஸ், இன்று மகன்.. எடப்பாடிக்கு ஒரே சான்ஸ் இருக்கு.. பாஜக?: குபேந்திரன்

எடப்பாடி, ஓபிஎஸ் அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையேயான, அதிகாரப்போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேரன் நம்மிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

தர்மயுத்தத்தை துவங்கி உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இந்த தர்மயுத்தம் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைய போகிறது என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்..

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட ஆரம்பித்தபோதே அவரது தர்மயுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. அதனால்தான், சட்டவிதிகளை எப்படி திருத்தலாம் என்று துணிந்து கேள்வி எழுப்புகிறார்கள்.

 டீல் ஓகே

டீல் ஓகே

எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜக மேலிட ஆதரவு தற்போது அதிகமாக ஓபிஎஸ் டீமுக்கு அதிகமாக கிடைத்து கொண்டிருக்கிறது.. அதிலும், தமிழகத்தின் பாஜக பொறுப்பாளரே, ஓபிஎஸ்ஸுக்குதான் சப்போர்ட் செய்துவருகிறார்.. அதேபோல, எப்படியும், இரட்டை இலை தங்களுக்குதான் கிடைக்க போகிறது என்பதிலும் எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. எனினும், இந்த தர்மயுத்தம் ஓபிஎஸ்ஸுக்கு எந்தவகையில் சாதகமாக போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.. இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழுக்கு, மூத்த பத்திரிகையாளர் குபேரன் ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியின் சுருக்கம்தான் இது:

 ஸ்டிராங் ப்ளான்

ஸ்டிராங் ப்ளான்

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி பாஜக என்பதுபோல், மீடியாக்களால் கட்டமைக்கப்படுகிறது.. ஆனால், உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும்.. தேர்தல் சமயங்களில், தானாகவே அதிமுக தன் பலத்தை நிரூபித்துவிடும்.. பாஜகவோ, அண்ணாமலையோ சொல்கிற வார்த்தையைவிட, எடப்பாடி சொல்லும் எந்த ஒரு வார்த்தைக்குமே வலிமை உண்டு என்றே நம்புகிறேன்.. அடுத்த தர்மயுத்தத்தை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இதனால் என்ன பலன் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. அதேபோல, நீதிமன்றம் போவதாலோ, மீடியா முன்பு புலம்புவதாலோ, ஓபிஎஸ்ஸுக்கு ஒரு பலனும் கிடைக்க போவதில்லை.,.

மெஜாரிட்டி

மெஜாரிட்டி

தமிழகம் முழுவதும் தொண்டர்களிடம் போனால் மட்டுமே இதற்கு தீர்வு.. அவர்கள்தான் முக்கியம்.. "நான்தான் அதிமுகவின் உண்மையான தலைவன்" என்று தொண்டர்களிடம் முறையிட வேண்டும்.. யார் பக்கம் மெஜாரிட்டியாக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளார்களோ, அவர்கள் பக்கம்தான் கட்சி தானாகவே செல்லும் என்பது யதார்த்தம்.. ஜானகி + ஜெயலலிதா பிரச்சனை வரும்போது, 89-ம் ஆண்டு தேர்தலை இருவருமே சந்தித்தார்கள்.. ஜானகி அணி பெரிதாக வெற்றி பெறவில்லை.. அதனால், தானாகவே, ஜானகி விலகிவிட்டார்..

தர்மயுத்தம்

தர்மயுத்தம்

அப்படிப்பட்ட சூழலுக்கு மறுபடியும் இப்போது அதிமுக வரும்போதுதான், ஓபிஎஸ்ஸா + எடப்பாடியா? என்று தெரியவரும்.. அதுவரை இவர்கள் மாறி மாறி மீடியாவிடம் இப்படியே புலம்பி கொண்டிருப்பதுதான்.. ஆனால், தர்மயுத்தத்தால் எந்த பலனும் அவருக்கு கிடைப்பதில்லை.. ஓபிஎஸ்ஸுக்கு தென்மாவட்டத்தில் என்ன செல்வாக்கு இருக்கிறது? அன்றைக்கு மகன், இன்றைக்கு அப்பா.. அவ்வளவுதான்.. பையனை வெற்றி பெற வைத்தது தவிர வேறென்ன செல்வாக்கை பெற்றிருக்கிறார் ஓபிஎஸ்? எதுவுமே கிடையாது.. அதனால் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்? கட்சி யாரிடம் செல்லும் என்பதெல்லாம் இன்னொரு தேர்தல் வந்தால்தான் தெரியவரும்..

 டிடிவி மிஸ்ஸிங்

டிடிவி மிஸ்ஸிங்

இந்த நேரத்தில், இப்போதைக்கு எடப்பாடிக்கு மட்டும்தான் செல்வாக்கு அதிமுகவில் உள்ளது.. பாஜக இந்த விஷயத்தில் கண்டிப்பாக ஒரு வழிமுறையை கையாளவே செய்யும்.. பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றாலும் சரி, அனைவரும் விலகிவிடுங்கள் என்றாலும் சரி, எந்த முடிவை பாஜக சொன்னாலும், அதிமுக அதற்கு கட்டுப்படவே செய்யும்.. காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே, சசிகலா, தினகரனை சேர்த்து கொள்ள சொல்லியும், எடப்பாடி மறுத்துவிட்டார்.. இதனால் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தாங்கள் சொல்வதை இந்த முறை கேளுங்கள் என்று கண்டிப்பாக ஒரு அழுத்தத்தை பாஜக தரும்..

 சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

அப்படி ஒருவேளை பாஜக சொல்வதை ஏற்றுக் கொண்டால், எடப்பாடியின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.. ஒருவேளை பாஜகவை எதிர்க்க எடப்பாடி துணிந்துவிட்டால், அவருக்கு எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.. பாஜக எங்கள் கூட்டணியில் வேண்டாம், எங்களை நிர்ப்பந்திக்கிற பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடியும், அவருடனிருக்கும் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால், உண்மையிலேயே எடப்பாடிக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+