"நெளியும்" எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ்ஸின் "ஊசலாட்டம்".. தள்ளாடும் "இலைகள்".. அப்ப வேற வழியே இல்லையா?
சென்னை: ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டுவிட்டதா? அமித்ஷா ஏன் அப்படி சொன்னார்? எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கணக்குதான் என்ன என்பது குறித்த பல சந்தேகங்கள் வட்டமிடுகின்றன.
கட்சிக்குள்ளும் சரி, நீதிமன்ற தீர்ப்புகளிலும் சரி.. அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஆரம்பத்தில் இருந்தே ஓங்கி வருகிறது.. இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை, எடப்பாடியிடமே கட்சி உள்ளது என்பதை மறுக்க முடியாது.
அதேசமயம், இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம் என்பதை ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஆதரவாளர்கள் மாநாடு நடத்தியும் பெரும்பலன் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லை.

நிரூபணம்: உண்மையை சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதைவிட, தங்கள் பலத்தை மேலிட பாஜகவுக்கு நிரூபிக்கவே, ஓபிஎஸ் திருச்சி மாநாட்டை கூட்டியதாக சொன்னார்கள்.. ஆனால் அந்த மாநாடு அவருக்கு எந்த விதத்திலும் நன்மை பயத்தது போல தெரியவில்லை.. இதற்கு பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறது ஓபிஎஸ் தரப்பு..
எனவே, அதிமுகவில் எப்படியாவது மறுபடியும் சேர்ந்து விடுவதுதான் ஒரே வழி என்ற ரூட்டை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக ஒருசிலர் மூத்த தலைவர்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால் அதற்கும் பெருத்த பலன் கிடைக்கவில்லை..
பாஜக கவனம்: எப்படிப்பார்த்தாலும் பாஜக தங்களை விடாது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது தங்களை சேர்த்துக்கொள்ள டெல்லி மேலிடம் கவனம் செலுத்தும் என்றும் கருதுகிறார்கள்.. கடந்த வாரம் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்லும்போது, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார்.. அப்போதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு பிடி கொடுக்கவில்லை..
ஆனால் அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட விரும்பவில்லை, அது அவர்களது உள்கட்சி விவகாரம் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார்.. அத்துடன் ஓபிஎஸ்ஸை சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம், அவர்கள் இருவருமே தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.. ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாஜக எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம்.. அதிமுகவினர்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அமித்ஷா சொல்லி உள்ளார்.
நெருக்கடி: அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பது, எடப்பாடி ஆதரவாளர்களோ மிகுந்த மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஓபிஎஸ்ஸை வைத்து நெருக்கடியை தருவார்கள் என்று எதிர்பார்த்து கிடந்த நிலையில், இப்படி ஒரு வார்த்தையை அமித்ஷா சொல்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி மீது, பாஜக தலைவர்கள் பெரிய நம்பிக்கை வைத்து இருப்பதையும் அறிய முடிகிறது என்கிறார்கள்.. அத்துடன் ஓபிஎஸ்ஸை சேர்க்காமலேயே தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் அழுத்தமாக வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
ஆனால், அமித்ஷா சொன்ன இதே வார்த்தைகளைத்தான், கடந்த ஒரு வருடகாலமாகவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் செய்தியாளர்களிடம் சொல்லி வருகிறார்.. பாஜக என்றில்லை, எப்போதுமே ஒரு கட்சியானது, இன்னொரு கட்சியின் உட்பூசலில் தலையிடுவது கிடையாது.. அப்படியே தலையிடுவதானாலும் அதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்திக் கொள்ளாது.. இதைதான் பாஜகவும் கடைப்பிடித்து வருகிறது.. அந்தவகையில், அமித்ஷா பேசியது ஓபிஎஸ் தரப்புக்கு, அதிர்ச்சி என்றெல்லாம் கூற முடியாது. இன்னமும் பாஜக மீதான நம்பிக்கை ஓபிஎஸ் தரப்புக்கு தளர்ந்துவிடவில்லை என்கிறார்கள்.
லாஸ்ட் சான்ஸ்: இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.. அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை என்று மட்டுமே அமித்ஷா சொல்லி ஒதுங்கிவிடவில்லை.. "பேசி தீர்த்து கொள்ள வேண்டும்" என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.. இது ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.. அதேசமயம் எடப்பாடி தரப்புக்கு சங்கடத்தையும் தந்துள்ளது.. எனினும், தங்களின் தொண்டர்கள் ஆதரவு எவ்வளவு? மொத்த வாக்கு பலம் எவ்வளவு? என்பதையும் ஓபிஎஸ் தரப்பு நிரூபித்து கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவே தெரிகிறது.. பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications