கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர் வழக்கம் போல் விநியோகம் செய்யப்படுகிறது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அளவுடன் விநியோகம் செய்யப்படுகிறது. வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் பயப்படும் நிலை இல்லை. தற்போதைய நிலையில் கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே, வணிக சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட தடை தான் என்கிறார்கள். ஏனெனில் கடைகளுக்கு ஒரு நாளைக்கு நிறைய சிலிண்டர் ஒவ்வொரு கடைக்கும் தேவைப்படும். வீடுகளை பொறுத்தவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு மேல் ஒரு சிலிண்டர் நிச்சயம் வரும்.

ஆனால் கடைகளை பொறுத்தவரை ஒரு நாளைக்கு ஒரு சிலிண்டர் முதல் 50 சிலிண்டர் வரை தேவை.. அவ்வளவு சிலிண்டர் ஒரு கடைக்கே தேவை என்கிற நிலையில் திடீரென விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்கனவே விற்பனைக்கு வைத்திருந்த சிலிண்டர்களை சில ஏஜென்சி ஊழியர்கள் பதுக்கினார்கள். விற்பனை செய்ய வேண்டியவர்களே கூடுதல் விலைக்கு தான் விற்கிறார்கள்.. 4000, 5000 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதுதான் வணிக சிலிண்டர் நிலைமை.
வீட்டு சிலிண்டரை பொறுத்தவரை போதிய இருப்பு அரசிடம் இருக்கிறது. ஆனால் புக்கிங் நாட்களை 25 நாட்களாக தள்ளிப்போட்டதால், ஏற்கனவே புக்கிங் செய்யாமல் அசால்டாக இருந்தவர்கள் இப்போது, அவசர அவசரமாக புக்கிங் செய்கிறார்கள். ஆனால் சிலிண்டர் புக்கிங் ஆகாமல் இருக்கிறது. இதுதான் தற்போதைய மக்களின் அவஸ்தைக்கு காரணமாக உள்ளது. ஒரே நேரத்தில் பலரும் பதற்றத்தில் புக்கிங் செய்வதும், புக்கிங் ஒர்க் ஆகவில்லை என்றால் கேஸ் ஏஜென்சிக்கு படை எடுப்பதாக மக்கள் இருக்கிறார்கள்.
அப்படி வருபவர்களிடம் பொறுமையாக நிலைமையை எடுத்துக்கூறி, அனுப்பி வைக்கிறார்கள். எப்போதும் போல் சாதாரணமாக சிலிண்டர் புக்கிங் செய்தால் 2 அல்லது 3 நாளிலேயே வீடுகளுக்கு சிலிண்டர் வருகிறது. ஆனால் சிலிண்டர் முன்பதிவு செய்யும் தொழில்நுட்ப உதவிகள் தான் பெயிலியர் ஆகிவிடுகிறது என்றும், அதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
தற்போதைய நிலையில் பேச்சுலர்கள் பாடு திண்டாட்டமாகத்தான் சில நாட்கள் இருக்க போகிறது..ஏனெனில் சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் கடைகள் வரிசையாக மூடப்பட்டுவருகின்றன. சில கடைகளில் விலை மிக அதிகமாக உள்ளது. அதேபோல் பல்வேறு கேஸ் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆட்டோக்கள் ஓட முடியாத நிலை இருக்கிறது. இதுதான் தற்போது பெரிய சிக்கலாக இருக்கிறது. எல்லாம் சரி.. கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்..
அகில இந்திய எல்பிஜி சங்க இணை செயலாளர் வசந்த் இதுபற்றி கூறும் போது, வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர் வழக்கம் போல் விநியோகம் செய்யப்படுகிறது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அளவுடன் விநியோகம் செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் இருப்பு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. அடுத்த கப்பல் மார்ச் 25-ம் தேதி வருகிறது. அதன்பிறகு, இப்பிரச்சினை ஓரளவு சீராகும் என எதிர்பார்க்கிறோம். காஸ் சிலிண்டர் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை 45 முதல் 65 சதவீதம் வரை அதிகரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications