செப்டம்பர் கெடு.. முடிச்சுடுங்க! ஆர்டர் போட்ட உதயநிதி.. "வெகு விரைவில்".. துள்ளிக்குதித்த அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு திமுக அமைச்சரவையிலும், நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்கள் நடக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருப்பது ஏற்கனவே ஒன் இண்டியா வாசகர் அறிந்ததே ! இந்த வருடத்தின் இறுதியில் அந்த பயணம் இருக்கும் என தெரிகிறது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் அமீரகத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதில் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கெடு

கெடு

இந்த நிலையில், செப்டம்பர் அல்லது அக்டோபரில் அடுத்த வெளிநாட்டு பயணத்தை வைத்துக்கொள்ள ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதில் இங்கிலாந்தில் முக்கியமான சில நிறுவனங்களை முதல்வர் சந்திக்க உள்ளார். இந்த பயணம் மூலம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கான திட்டமிடல் இப்போதே செய்யப்பட்டு வருகின்றது.

 என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த பயணம் ஒரு பக்கம் இருக்க திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நடித்து முடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிவதாக உள்ளது. அதனை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். அதனால் உதயநிதி தொடர்பான காட்சிகளை முடிக்க வேண்டி மற்ற நடிகர்-நடிகைகளின் கால்சீட்டுகள் மாற்றியமைக்க சம்மந்தப்பட்ட நடிகர்-நடிகைகளிடம் பேசி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும். வேறு சில பணிகள் உள்ளன என்று உதயநிதி தரப்பு தனது இயக்குனர்களுக்கு தெரிவித்து உள்ளதாம். உதயநிதியின் படப்பிடிப்பை முன்னதாக அவசரம் அவசரமாக முடிக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்று அறிவாலய தரப்பில் விசாரித்தபோது பல முக்கிய தகவல்களை அவர்கள் குஷியாக பகிர்ந்து கொண்டனர். ''முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது வெளிநாடு பயணம் செல்வதற்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து உதயநிதியை அமைச்சராக்கி விட்டு செல்வது என தலைவர் குடும்பம் யோசிக்கிறது.

அமைச்சரவை

அமைச்சரவை

அமைச்சரவை மாற்றம் பல நாட்களாக கார்டில் இருக்கும் விஷயம்தான். இதை ஊடகங்களும் ஏற்கனவே சொல்லிவிட்டன. விரைவில் அந்த மாற்றம் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் இந்த மாற்றம் நடக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அது ஏன் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக மாற்றம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கும் அறிவாலய வட்டாரத்தில் இருந்து பதில் கிடைத்துள்ளது.

வெளிநாடு பயணம்

வெளிநாடு பயணம்

அதன்படி முதல்வரின் இந்த பயணத்தில் உதயநிதி இருக்க மாட்டார். அதனால் அமைச்சராக்கி நிர்வாகத்தை கவனிக்கும்படி பொறுப்புகளை உதயநிதியிடம் கொடுக்கப்படலாம்'' என்கிறது அறிவாலயம் தரப்பு. வெளிநாடுகளுக்கு சென்றாலும் அங்கிருந்தபடியே நிர்வாகத்தை ஸ்டாலினால் கவனிக்க முடியும். துபாய் சென்ற போது, அங்கிருந்தே முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

ஸ்டாலின் பிளான்

ஸ்டாலின் பிளான்

இங்கே இருந்த சில அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இருந்தாலும் இந்த முறை வெளிநாடு பயணம் என்பது குறைந்தபட்சம் 10 நாட்களாவது இருக்கப் போகிறது. இந்த பயணம் கொஞ்சம் நீண்ட பயணமாக இருக்கிறது. அதனால்தான் நிர்வாகத்தை கவனிக்க ஆள் தேவை என்பதாலேயே உதயநிதி அமைச்சராக்கப்படுவார் என்கின்றனர். இதனால் விரைவில் அமைச்சரவை மாற்ற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+