ITR ஃபைல் பண்ணிடீங்களா? இன்னும் பலருக்கும் வருமான வரி பக்கம் திறக்காதது ஏன்? Refund எப்போது வரும்?
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கி உள்ளது. ஆனால் ஏப்ரல் தொடங்கி 1 வாரம் ஆகியும் கூட.. இதுவரை வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் தளத்தில் இந்த நிதி ஆண்டிற்கான அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.

1. 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதை படிப்படியாக திறக்க உள்ளனர்.
2. கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏழு ஐடிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது, எனவே வருமான வரி கணக்கு தாக்கல் இந்த மாதம் தொடங்குவதை உறுதிசெய்ய தேவையான படிவங்களை வரித்துறை விரைவில் வழங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிவங்கள் அளிக்கப்படும்.
3. , பொதுவாக, இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ITR தொடங்கும்.
4. ஏற்கனவே இந்த படிவம் திறந்து ITR தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் refund கிடைக்கும்.
5. இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் refund கிடைக்கும்.
6. ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.
வருமான வரி ITR
இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ல் தொடங்கி.. ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் இதில் 7.5 கோடிக்கு அதிகமானோர் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
வருமான வரி refund கிடைக்காது
பலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் ரீ பண்ட் கிடைக்காமல் போகலாம். முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்யவது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரி பண்ட் சென்றுவிடும்.
வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.












Click it and Unblock the Notifications