கிளாம்பாக்கம் பயணிகள் ஏக்கம் எப்போது தீரும்? ரயில் நிலைய அதிகாரிகள் சொல்வது என்ன?
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மிக தாமதமாக நடப்பதால் நிர்ணயிக்கட்ட கெடுவை தாண்டி இன்னும் நாட்கள் பிடிக்கும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அமைக்கப்படும் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளும் முடிவடையாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி கூறுகையில், ஆகாய நடைபாதை பணிகளை பொறுத்தவரை அது மாநில அரசின் பணி எனவும், ஆகாய நடைபாதை பணிகள் முடிந்தால் மட்டுமே பயணிகள் போக்குவரத்திற்காக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் விமான நிலையத்துக்கு நிகரான வடிவமைப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருந்தது.
திருச்சி, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னை நகருக்குள் செல்வதற்கும் தனித்தனியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லை என்பதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தொடர்ந்து படிப்படியாக பேருந்து நிலையத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டன.
இதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பயணிகள், அங்கிருந்து சென்னை சிட்டிக்குள் செல்வதற்கு மற்றொரு பஸ்சை பிடிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து அவர்களது ஊர்களுக்கு ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய நிலை இருப்பதனால், வயதான தம்பதிகள், குழந்தைகள் மற்றும் லக்கேஜ்கள் அதிகமாக கொண்டு வரும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறி வந்தனர்.
பணிகள் எப்போது தான் முடிவடையும்?
இதனால் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதேபோல், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகளும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, எதிரே உள்ள சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தான் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்கள் நின்று செல்லும் வகையில் அங்கு பிளாட்பார்ம், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து நேரடியாக ரயில் நிலையம் செல்லும் வகையில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே இந்த ரயில் நிலையம் அமைந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. விரைவில் அதாவது ஜூலை முதல் வாரத்தில் இந்த ரயில் நிலையம் திறக்க திட்டமிட்டப்பட்டு இருந்த நிலையில், தற்போது பணிகள் மிக தாமதமாக நடப்பதால் நிர்ணயிக்கட்ட கெடுவை தாண்டி இன்னும் நாட்கள் பிடிக்கும் எனத்தெரிகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு நடைமேடை பணிகள் முடிவடையாமல் இருக்கிறது.
தற்போதைக்கு முடிவடைவது போல் தெரியவில்லை
ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போதைக்கு முடிவடைவது போல் தெரியவில்லை எனவும் இன்னும் ஏராளமான பணிகள் நிலுவையில் இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி கூறுகையில், "ஆகாய நடைபாதை பணிகளை பொறுத்தவரை அது மாநில அரசின் பணியாகும். ஆகாய நடைபாதை பணிகள் முடிந்தால் மட்டுமே பயணிகள் போக்குவரத்திற்காக இந்த ரயில் நிலையம் திறக்கப்படும்.
பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு நேரடியாக வந்து செல்ல ஏதுவாகவே இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துள்ளன. இரண்டாவது நடைமேடை பணிகள் இன்னும் பாக்கி உள்ளது. அது விரைவில் முடிந்துவிடும். அதன் பிறகு மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கும்" என்றார்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைமேம்பாலமானது ரூ.74.50 கோடி மதிப்பீட்டில் 275 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. முதலில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதன் பின்னர் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இரு புறமும் பெரிய அளவிலான தூண்கள் அமைக்கும் பணிகளானது நடந்து வருகிறது.
இருபுறமும் லிஃப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படுகின்றன. வயதானவர்கள், குழந்தைகள் படி ஏறி செல்லாமல் லிஃப்டில் செல்லும் வகையில் இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் இரு புறமும் லிஃப்ட் அமைக்கப்பட்டு வருகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications