இதுக்கு எதுக்கு அரசியலில் இருக்கணும்? உதயநிதியை பார்த்து விஜய் கேள்வி! சட்டமன்றத்தில் சலசலப்பு
சென்னை: எலும்பை உடைப்பேன், எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுக முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள் பேசினார்கள் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், இப்படிய பேசுபவர்கள் எதற்காக அரசியலில் இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் விஜய் பேசியதாவது, "சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஆர்தோ சர்ஜன் மாதிரி.. எலும்பு டாக்டர் மாதிரி.. சட்டசபைக்குள்ளேயே எலும்பை உடைப்பாராம். இந்த மாதிரியான பேச்சுகள் எதற்கு? இதுதான் அரசியலா? இதையெல்லாம் மக்கள் பார்த்து பார்த்துதான்.. அவர்கள் அந்த பக்கம் உட்டகார்ந்திருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு அட்வைஸ் செய்ய வரவில்லை. இன்னொரு திமுக மூத்த உறுப்பினர்.. மக்கள் அந்த கட்சிக்கு ஓட்டு போடாததால் மக்களுக்கு நல்ல சாவே வராதாம். எனக்கு புரியல.. இந்த 50-60 வருடமாக இதே மக்கள்தான் இவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களை பார்த்து எப்படி இந்த வார்த்தை வருகிறது? என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்காத மனசு எப்போது இவர்களிடம் இல்லையோ.. இவர்கள் ஏன் அரசியலில் இருக்கணும்? என்கிற கேள்விதானே வரும்? மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விஜய்யிக் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பை தெரிவிதிருந்தனர். இன்று கேள்வி நேரம் கிடையாது என்பதால் விஜய்யின் பேச்சு குறித்து மறுப்பு தெரிவிக்க, மாற்று கருத்துக்களை பதிவு செய்ய முடியவில்லை என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
