கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை எப்போது? நவம்பரில் சோதனை ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. சுமார் 4 மாதங்கள் வரை இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், வணிக ரீதியாக மக்கள் பயன்பாட்டுக்கு அதன்பிறகே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில்கள் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் ( வடபழனி, அண்ணாசாலை) என இரண்டு வழித்தடங்களில் ஓடுகிறது. சென்னையில் இரண்டாம் கட்டமாக 116.1 கி.மீ. தூரத்துக்கு 3வது, 4வது, ஐந்தாவது வழித்தட பணிகள் நடந்து வருகிறது.

Koyambedu Nandambakkam Metro rail Chennai metro

இதில் 3வது வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட்வரையிலும், 4வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையிலும், ஐந்தாவது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரையிலும் பணிகள் நடந்துவ ருகிறது. இந்த மூன்று வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் சுமார் 26 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரை கட்டுமான பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது.இதில் 90 சதவீதத் தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துவிட்டன்.

எஞ்சியுள்ள தண்டவாளப் பணிகளை அடுத்த பத்து நாட்களுக்குள் முடித்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. , கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரை, வரும் நவம்பர் மாதத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில். கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சோதனை ஓட்டம், வணிக ரீதியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படு வதற்கு முன்பு சுமார் 4 மாதங்கள் வரை நீடிக்கும் என அதிகாரி கூறினார்.

இந்தப் பாதையில் ஓட்டுநர் இல்லாத அதிநவீன ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.. இதற்கான மென்பொருள்கள் ரயில்களில் ஏற்கனவே நிறுவப்பட்டு, சோதனை ஓட்டங்கள் மூலம் போதிய இயக்க அனுபவமும் பெறப்பட்டிருப்பதாக கூறிய அதிகாரிகள், மேலும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை அமைக்கும் பணிகளும் வரும் நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

சென்னை வர்த்தக மையம் முதல் ஆலந்தூர் வரையிலான 3.6 கிலோ மீட்டர் பாதையானது வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த வழியாகச் செல்வதால், இதன் இணைப்புப் பணிகளை முடிப்பதற்கு மேலும் 45 முதல் 60 நாட்கள் வரை ஆகும் என்றும், மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த பின்னரே சிக்னல் சோதனைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கோயம்பேடு-ஆலந்தூர் இடையே போரூர் வழியாக வரும் இந்த வழித்தடம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

118.9 கி.மீ நீளமுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மொத்தம் 138 மூன்று-பெட்டி ரயில்கள் தேவைப்படுகின்றன. இவை மூன்று கட்டங்களாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 36 ரயில்கள் வரப்போகிறது. அதேபோல் இரண்டாம் கட்டமாக 70 ரயில்கள் வரப்போகின்றன. அத்துடன் மூன்றாம் கட்டமாக 32 ரயில்கள் வரப்போகின்றன. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடம் 4-ன் முதல் பகுதி, தொழில்நுட்பப் பணிகளும் பாதுகாப்புப் பரிசோதனைகளும் நிறைவடைந்து திறப்புக்குத் தயாராகவே இருக்கிறது. ஆனால் பூந்தமல்லி - வடபழனி பாதையில் உள்ள சாலிகிராமம், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம் உள்ளிட்டவை இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அங்கு விரைவில் ரயில்கள் ஓடத்தொடங்கும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+