மகளிர் உரிமை தொகை ரூ.1000.. புது ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. எப்போது பணம் வரும்? முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு.. எப்போது மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. அதன்படி தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் ஏற்கனவே பலருக்கு வழங்கப்பட்டு விட்டன.

இதில் புதிதாக குடும்ப தலைவி ஆகும் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வாரம் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

tamil nadu government notification ration magalir urimai thogai

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2 வாரமாக தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் ரேஷன் கார்டுகளை பெற்றுள்ளனர்.

மகளிர் உரிமை தொகை: ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை. பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படாது.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த 4 மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விரிவாக்கம்: இந்த திட்டத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் கண்டிப்பாக இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்து உள்ளனர். 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

திட்டத்தின் நோக்கம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+