சென்னையில் எப்போது வெயில் குறையும்.. எதிர்பார்த்த நல்ல செய்தியை சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்.. சூப்பர்
சென்னை: சென்னையில் எப்போதில் இருந்து வெயில் குறையும், எப்போது மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் முடியும் தருவாய் நெருங்கியும் கூட சென்னையில் இன்னும் வெயில் குறையவில்லை. அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகியும் சென்னையில் வெயில் இன்னும் குறையவில்லை.
கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.

வெயில் அதிகரிப்பு: மாறாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இருந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் மீண்டும் சென்னையில் வெயில் அடித்து வருகிறது.
வெயில்: இந்த நிலையில் சென்னையில் எப்போதில் இருந்து வெயில் குறையும், எப்போது மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதில், சென்னையில் இன்றும் வெயில் மோசமாக இருக்கும். சென்னையின் 40 + டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை தொடர்ந்து தொடர போகிறது.
இன்று 41 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும். இன்றும் சென்னையில் இன்னொரு வெப்பமான நாள்தான். அதே சமயம் இந்த பயங்கரமான வெப்ப நாட்கள் எப்போதும் நல்ல மழையுடன் முடிவடையும். ஜூலை 2015 வெப்ப நாட்களில் இதைப் பார்த்தோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையின் வெப்ப நாட்கள் முடிவுக்கு வரும். ஜூன் மாதம் சென்னைக்கு ஒன்றும் வலுவான மழை மாதம் அல்ல, ஜூன் மாதத்தில் சராசரியாக 50+மிமீ மட்டுமே மழை பெய்யும். இந்த மாதம் சராசரியை விட இரண்டு மடங்கு நல்ல மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications