"காவி நிறம்".. தடா ரஹீம் போட்ட போட்டோ.. தலைகீழாக பறக்கும் தேசிய கொடி.. சர்ச்சைகள் ஓய்வதில்லை
தலைகீழாக தேசிய கொடி பறந்ததால், அது தொடர்பான சர்ச்சைகளும் ஓயாமல் உள்ளது
சென்னை: தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிடுவது குறித்த செய்திகள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.. இதையடுத்து அது தொடர்பான விமர்சனங்களும் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதன்படியே, தேசிய கொடியை ஒவ்வொருவரும் வீடுகளில் ஏற்றி வைத்து வருகின்றனர். அதேபோல, தங்களது சமூகவலைதளங்களிலும் புரொபைல் படங்களாக தேசிய கொடியை வைத்து வருகின்றனர்.

நிறங்கள்
இந்நிலையில், தேசிய கொடி விவகாரம் சூடுபிடித்து வருகிறது.. ஒவ்வொரு வருடமும் தேசிய கொடியை தலைகீழாக பறப்பதாக புகார்கள் வெடிக்கும்.. எங்காவது, யாராவது, தவறுதலாக பிடித்து கொண்டிருப்பதாவோ, அல்லது பறக்க விடுவதாகவோ புகார்கள் எழும்.. அது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை கூட்டும்.. கடந்த வருடமும் இப்படித்தான் கேரளாவில் நடந்தது. கேரளாவில் நடந்த குடியரசு தின விழாவில் அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டார். .. இந்தத் தவறு நீண்ட நேரத்துக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தேசியக் கொடி தரையிறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் ஏற்றப்பட்டது.

கர்ஜனை
இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த, மாநில துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில் என்பவர்தான் இந்தசர்ச்சையில் சிக்கினார்.. தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டுள்ளதை அங்கிருந்த செய்தியாளர்கள் பார்த்தனர்... உடனே மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படவும், தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது. இதையடுத்து, தேசியக் கொடியை அவமதித்த அமைச்சர், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் முழக்கமிட்டார்..

காவி நிறம்
ஆனால், இதே கேரளாவில், இதே பாஜகவில், இதே மாநில தலைவர் சுரேந்திரன், இதே தவறை அதற்கு முந்திய ஆண்டு செய்தார்.. பாஜக ஆபீசில் தேசிய கொடியை ஏற்றியபிறகு பார்த்தால், கொடியின் பச்சை நிறம் மேல்பகுதியில் வந்துள்ளது.. காவி நிறம் கீழே போயுள்ளது தெரியவந்தது.. பிறகு உடனடியாக மாற்றி ஏற்றப்பட்டது. இந்த தவறை காங்கிரசும் செய்துள்ளது.. கோவையில், மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்த தவறு அதிமுகவிலும் நடந்துள்ளது..

தலைகீழாக பறந்தது
இன்றுகூட புதுச்சேரி மாநில காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாவட்ட அதிமுக துணைச் செயலாளருமான அசனா தன்னுடைய வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றினார்.. ஆனால் அந்த தேசியக்கொடி தலைகீழாக இயற்றப்பட்டு வெகு நேரமாகவே அது தலைகீழாகவே பறந்து கொண்டு இருந்தது.. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் அதனை தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். அதனை இப்போது சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு வருகின்றனர்..

சுரய்யா பக்ருதீன்
அதேபோல, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம், கடந்த சில தினங்களாகவே, தேசிய கொடி குறித்து சில ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.. அதில், பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை நுழைத்து, கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.. "ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் பாஜகவினரும் ஏற்றும் தேசிய கொடியும் சுரய்யா பக்ருதீன் வடிவமைத்த தேசிய கொடி தான்" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நைலான் துணி
"ஆர்எஸ்எஸ்ஸின் தேச பக்தியை பாருங்க ... கதர் துணியில் தேசிய கொடியை தயாரித்து வந்த நிலையை மாற்றி நைலான் துணியிலான தேசிய கொடி தயாரிக்க அம்பானி கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து உள்ளது பாஜக அரசு என்றும், தேசிய கொடியை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் தலைகீழாக பிடித்து உள்ளனர்.. முன்னே பின்னே செத்து இருந்தால் தானே சுடுகாடு தெரியும் என்ற பழமொழி போல முன்னே பின்னே தேசிய கொடி ஏற்றி இருந்தால் தானே?" என்று விமர்சித்து அந்த ட்வீட்களையும், அதற்குரிய போட்டோக்களையும் தடா ரஹீம் பதிவிட்டுள்ளார்.

ஓய்வதில்லை சர்ச்சை
அந்தவகையில், இந்த வருடமும் தேசிய கொடி விவகாரம் வெடித்துள்ளது.. இன்னும் சுதந்திர தினத்தன்று எத்தனை கொடிகள் தலைகீழாக பறக்க போகின்றனவோ தெரியவில்லை.. தேசியக்கொடிக்கு என்று ஒரு தனி மகிமை உள்ளது, அதனை சாமானிய மக்கள் முறையாக ஏற்றினால் பரவாயில்லை ஆனால் இவ்வாறு தவறுதலாக பறக்கவிட்டு அதன் மதிப்பை தரம் தாழ்த்துவது வேதனை அளிக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்..

பெரிய விஷயமா?
ஆனால், அதேசமயம், இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் உள்நோக்கம் கற்பிக்கப்படக்கூடாது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.. இப்படி கட்சி பாகுபாடு இல்லாமல் தலைகீழாக தேசிய கொடியை பறக்க விட வேண்டிய அவசியம் யாருக்குமே கிடையாது என்றும், இதெல்லாம் கவனக்குறைவால் ஏற்பட்ட நிகழ்வுகளே என்றும், இதையெல்லாம் பெரிதுபடுத்திப் பார்க்கக்கூடாது என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன..

கலர் - நிறம்
இந்த தேசம் அனைவருக்குமானது.. இந்த மண் பொதுவானது.. தேசிய கொடி மீது யாருக்கும் எந்தவிதமான பாகுபாடும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. யதேச்சையாக நடப்பதை வைத்து, ஒருவரது தேசபக்தியை அளவிட கூடாது, தவறுதலாக நடப்பதற்கு குறை கண்டுபிடிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகின்றன.. அத்துடன் "நம்முடைய தேசிய கொடியை ஏற்றுவதிலும் ஒவ்வொருவரும் விழிப்புடனும், கவனத்துடன் இருக்க வேண்டும், முழு உணர்வுடன் அந்த நிமிடமாவது செயல்பட வேண்டும்.. இதில் எல்லாம் தெரியாமல்கூட தவறுகள் நடக்கவே கூடாது" என்றும் வேண்டுகோள்கள் உலா வருகின்றன.. ஆக மொத்தம், இது திட்டமிட்டு நடக்கும் சமாச்சாரம் கிடையாது என்றாலும், வருடா வருடம் இது தொடர்பாக சர்ச்சைகள் மட்டும் ஓய்வதில்லை..!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications