புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் எங்கே? தலைமறைவானவர்களை கைது செய்ய தனிப்படை போலீஸ் தீவிரம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். தலைமறைவானவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார்.

புஸ்சி ஆனந்த் மீது வழக்கு பதிவு
கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே புஸ்சி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. "எங்கள் தொண்டர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது" என்று முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல் உள்ளது.
வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியபோதே காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்துதான்," என புஸ்சி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
திட்டமிட்ட செயல் அல்ல
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல்கள் திருவடிக்குமார், ரவி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை கடுமையாக பாதிக்கப்படும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். பின்னர் மனுதாரர் வக்கீல்கள் ஆஜராகி, சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல.
ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வாதாடினர். இதற்கு அரசு வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வாதாடியபோது, மனுதாரர்களின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும், சாட்சியும் கிடையாது. இது போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் மனுதாரர்கள் வக்கீல்கள், கட்சியின் பொதுச் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்றனர்.
கைது செய்ய போலீசார் தீவிரம்
அதற்கு நீதிபதி, "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும்போது அதற்கான பொறுப்பு வேண்டும்தானே?" என கேள்வி எழுப்பினார். பின்னர் மனுதாரர் வக்கீல்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். இருதரப்பின் வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, "கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்த துயரமான சம்பவம் நடந்த சில நாட்கள்தான் ஆகிறது.
இது தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். எனவே மனுதாரர்களின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார். இதையடுத்து, புஸ்சி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் கைது ஆகலாம்
இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, சேலம், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆனந்த் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புஸ்சி ஆனந்துக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக புஸ்சி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர்












Click it and Unblock the Notifications