பாஜக பால் கனகராஜ் பிரச்சார கியரை மாற்றனும்.. எப்படி இருக்கு வடசென்னை? அனலடிக்கும் களம்
சென்னை: அதிமுக, திமுக பிரச்சாரங்கள் வேகமாக சூடுபிடித்து கொண்டிருக்கிறதாம்.. ஆனால், பாஜக தரப்பில் அந்த அளவுக்கு ஸ்பீடு இல்லை என்று ஆங்காங்கே சலசலப்புகள் முளைத்து வருகின்றன.. இது உண்மையா? என்ன நடக்கிறது தொகுதிகளில்?
வரப்போகும் எம்பி தேர்தலில், பல்வேறு கட்சிகள் பாஜகவுடன் இணைந்துள்ளன.. ஆனால், கூட்டணியில் இணைந்ததை, அந்தந்த கட்சிகளிலுள்ள நிர்வாகிகள் பலரே விரும்பவில்லையாம்..

பிரச்சாரம்: அதற்கேற்றவாறு தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரங்களிலும் சில சலசலப்புகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அதிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் 3 தொகுதிகளிலுமே, பாஜகவின் பிரச்சாரம் தொய்வில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தவாரம்கூட, மத்திய சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம், கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை என்றும், பிரச்சாரத்திற்கு யாரையும் முறையாக அழைப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.
பாமக: அதாவது, வினோஜ் பி செல்வம், பிரச்சாரம் செய்ய சென்றாலே, வழியெங்கும் பாஜக கொடிதான் இருக்கிறதாம்.. ஓரிரு இடத்தில் அமமுக கொடி இருக்கிறதே தவிர, பாமகவினரின் கட்சிக்கொடி ஒரு இடத்திலும் இல்லையாம்.. அதனால், பாமகவின் முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.
மேலும், பிரச்சாரம் குறித்து முன்கூட்டியே தகவல் சொல்வதில்லையாம். கடைசி நேரத்தில் பெயரளவுக்கு சொல்வதால், பிரச்சாரங்களிலும் பங்கேற்க முடிவதில்லை என்று பாமக தரப்பில் கூறப்படுகிறது.
இதே பிரச்சனைதான் வடசென்னையிலும் வெடித்துள்ளது.. வடசென்னை பாஜ சார்பில் பால்கனகராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை முறையாக சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முளைத்துள்ளது..
பால் கனகராஜ்: அதுமட்டுமல்ல, முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது, பிரச்சாரம் தொடர்பான ஆலோசனை செய்வது, வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது, கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவுகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், பிரசாரத்துக்கு வரக்கூடிய விவரங்களை கூட வார்டு பகுதி நிர்வாகிகளுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
இதனால் கூட்டணி கட்சியில் உள்ள பகுதி, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதேபோல, கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல நிர்வாகிகள், தொண்டர்களும் பிரச்சாரத்தை புறக்கணித்துவிட்டார்களாம். அதனால் வேறு வழியின்றி, கூட்டத்தை காண்பிக்க பணம் கொடுத்து பெண்களை பிரச்சாரத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுகள்: குறிப்பாக, சிறுவர், சிறுமிகளை கூட விட்டு வைக்காமல், பாஜக கொடி கம்பை கொடுத்து கால் கடுக்க நடக்க வைத்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. சில பெண்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து சென்றார்களாம்.. இதுவும் சோஷியல் மீடியாக்களில் சர்ச்சையாகி வருகிறது.
ஏற்கனவே, விருதுநகரில் நடிகை ராதிகாவின் பிரச்சாரங்களில் கூட்டணி கட்சிகள் சரியாக களப்பணி செய்யவில்லை என்றும், கடுப்பான ராதிகா, நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் கடந்த வாரம் செய்திகள் கசிந்திருந்தன. அந்த வரிசையில் சென்னை மாநகரமும் இணைந்துள்ளது, தமிழகத்தின் கவனம் பெற்று வருகிறது.
சொதப்பல்: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து, தமிழக பாஜக இந்த முறை களம் காண்கிறது.. அப்படியிருக்கும்போது, வடசென்னையிலும் தற்போது "கூட்டணி' புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
கடந்த 2020-ல் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டவர் பால்கனகராஜ்.. அந்த இணைப்பு விழாவில் பேசியபோது, "பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்... நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி" என்று பால்கனகராஜ் புகழாரம் சூட்டியிருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது.
பாஜக மீது இவ்வளவு பிடிப்பு இருந்தும்கூட, கூட்டணிகளை அனுசரித்து செல்லாமல், பிரச்சாரங்களில் "சொதப்புவதாக" கூறப்படுவது, வடசென்னையில் திமுக, அதிமுகவுக்கே களம் சாதகமாகிவிடும் என்பதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது..!!
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications