மட்டன் வாங்கினால் "அது" வேற மாதிரி இருக்கு.. சென்னை பீஃப் கடையில் நுழைந்ததுமே.. நிலைகுலைந்த ஆபீசர்ஸ்
சென்னை: இன்னும் நாய்க்கறி பரபரப்பே அடங்கவில்லை.. அதற்குள் மறுபடியும் சென்னையில் கலப்பட விவகாரம் தலைதூக்கியிருக்கிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் பெங்களூரில் நாய் இறைச்சியை விற்பதாக தகவல் ஒன்று வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது.. கேஎஸ்ஆர் சிட்டி ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பார்ம் நம்பர் 8 -ல் நாய் இறைச்சி இருப்பதாக புகார் வந்ததால், போலீசாரும் உடனடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்தனர்.

இதையடுத்து நடந்த சோதனையில், 150 பெட்டிகளில், கிட்டத்தட்ட 1,500 கிலோ இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. மட்டன் என்ற பெயரில் நாய்க்கறி விற்பனையா? என்று கதிகலங்கி போனார்கள் பொதுமக்கள்.
சென்னை: சென்னையிலும் இப்படி பலமுறை புகார்கள் கிளம்பியிருக்கின்றன.. மட்டன் என்ற பெயரிலேயே நாய்க்கறி, பூனைக்கறி, காக்கா பிரியாணி என்று விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த தகவலின்பேரில் போலீசாரும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு நடத்தி, நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிறார்கள்..
கடந்த வருடம், சென்னையில் பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு பூனை இறைச்சி விற்கப்பட்டது.. இதையடுத்து அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் இறங்கி, 2 பேரை கைது செய்திருந்தனர்.
புளியந்தோப்பு: ஆனால், 3 மாதங்களுக்கு முன்பு, மட்டனிலேயே மட்டன் கலப்படமும் சென்னையில் நடந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.. புளியந்தோப்பு இறைச்சி கூடத்துக்கு அருகிலேயே சிலர் மட்டன் விற்கிறார்களாம்.. 1 கிலோ மட்டன் ரூ.600க்கு விற்கிறார்கள். கிலோ ரூ.900-க்கு விற்கும்போது, இந்த பகுதியில் மட்டும் ரூ.600-க்கு எப்படி விற்க முடியும்? என்று பொதுமக்கள் குழம்பினார்கள்.
இதற்கு பிறகுதான் விஷயமே புரிந்தது. அதாவது, ராஜஸ்தான், சூரத் போன்ற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான ஆடுகள் லாரியில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வரப்படும். அப்படி கொண்டுவரும்போது, ஆடுகள் ஒன்றோடு ஒன்று நெரிசலில் சிக்கி, லாரியிலேயே 50 ஆடுகளுக்கு மேல் சென்னை வருவதற்குள்ளேயே இறந்துவிடுமாம். இந்த இறந்த ஆடுகளையே குறைந்த விலைக்கு விற்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை தந்திருந்தது.
புகார்: இதோ இப்போதும் சென்னையில், இறைச்சியில் அதிர்ச்சி கிளம்பியிருக்கிறது.. செனாய் நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு அழுகிய இறைச்சி விநியோகிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு நேற்று புகார் வந்தது.. இதையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், செனாய் நகரில் அருணாச்சலம் தெருவில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு அழுகிய நிலையில் மாட்டிறைச்சி தரமற்ற முறையில் பெட்டிகளில் அடைத்து வைத்திருப்பதும், இறைச்சி முழுவதும் எறும்பு, ஈக்கள் மொய்த்த நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ந்தனர்.. .
அழுகிய இறைச்சி: இதையடுத்து அவற்றில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன... அங்கிருந்த 800 கிலோ அழுகிய இறைச்சியை பறிமுதல் செய்து, சென்னைமாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அனைத்து இறைச்சியும் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
மாட்டிறைச்சி விற்கப்பட்ட 28 கடைகளில் அவற்றை சமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது... மேலும், சுகாதாரமற்ற முறையில் அழுகிய இறைச்சியை விற்ற நபரின் வீட்டுக்கு சீல் வைத்தனர். ஆனால், அந்த வீட்டு நபர் தலைமறைவாகிவிட்டாராம்.. அதனால அவரை சேத்துப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். மட்டன், பீஃப் என எல்லாவற்றிலும் தரமற்று விற்பனை செய்வது, இறைச்சி பிரியர்களை அதிர வைத்து வருகிறது.
அறிவிப்பு: நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் தரலாம் அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்று ஏற்கனவே பலமுறை, உணவுத்துறை அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications