கோடையில் சம்பவம் செய்யும் "மோச்சா" புயல்.. எங்கு கரையை கடக்கும்.. தமிழகத்தில் எங்கு பாதிப்பு?
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சம் தொடும் என்று பார்த்தால் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த புயல் எங்கே கரையைக் கடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நம்ம ஊரில் எப்போதும் ஏப்ரல், மே போன்ற கோடைக் காலத்தில் வெளியில் வெளுத்து வாங்கும். அப்போது மதிய நேரத்தில் வெளியே செல்லவே பயப்படும் மக்கள் வீடுகளிலேயே பெரும்பாலும் முடங்கியிருப்பார்கள்.
இந்தாண்டும் கூட கடந்த பிப்ரவரி மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல்லாம் வெப்பம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

வானிலை: இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாகவே குளிர்ச்சியான வானிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் நல்ல மழை இருந்து வருகிறது. இந்தச் சூழலில் கோடை வெயிலுக்கு மேலும் இதமாக நல்ல ஒரு செய்தி வந்துள்ளது.. இதனிடையே இப்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்றைய தினம் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது இப்போது மெல்ல வலிமையடைந்து வருகிறது. இருப்பினும், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பது புயலாக மாற பல காரணங்கள் இருக்கிறது. முதலில் கடலுக்கு மேல் இருக்கும் வெப்பம் 26 டிகிரியாக இருந்தால் மட்டுமே தாழ்வு மண்டலம் புயலாக மாறும்.
புயல்: அடுத்து அது நிலப்பகுதியில் இருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும். இல்லையென்றால் அது புயலாக மாறுவதற்கு முன்னரே கரையைக் கடந்துவிடும். பல காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் கரையைக் கடக்க இதுவே காரணமாகும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது கடலில் இருப்பதால் புயல் எளிதாக உருவாகும். அதேபோல இப்போதைக்கு வறண்ட காற்றும் இல்லை. இதனால் புயல் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்தச் சூழலில் இந்த புயல் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். அதன் பின்னர் 10ஆம் தேதி இது புயலாக வலுப்பெறும்.. இது வடமேற்கு திசையில் நகரம் இதனால் இந்த புயல் தமிழ்நாட்டைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எங்கே கரையைக் கடக்கும்: இந்த புயல் 11ஆம் தேதிக்குப் பின், கரையைத் தொடாமலேயே வங்கதேசத்தை நோக்கி வடகிழக்கில் நகரத் தொடங்கும் என்றே கூறப்படுகிறது. அதாவது இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுவது கிட்டதட்ட உறுதி என்றாலும் கூட இதனால் தமிழ்நாட்டிற்குப் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.
இதனால் புயல் பாதிப்புகள் எதுவும் இருக்காது என்ற போதிலும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யவே போகிறது. இன்று தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது.
அதேபோல வரும் 11ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications