“உருட்டு”.. ரபேல் வாட்ச் பில், ஊழல் பட்டியல் எங்கே? பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையை கிளறும் திலிப்
"திமுகவின் அனைத்து அமைச்சரும் புனிதர் ஆகிட்டாங்க போல. கடந்த 2 மாதங்களாக அமைச்சர் பற்றி வாய் திறப்பதே இல்லை ஈரோடு தேர்தல் உட்பட. அமைச்சரும் இவர் பற்றி வாய் திறப்பதில்லை."
சென்னை: பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அக்கட்சியின் ஐடி விங் முன்னாள் மாநில செயலாளர் திலிப் கண்ணன், "ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை மாதா மாதம் வெளியிடுவேன் என்று கூறிய அண்ணாமலை அதை வெளியிடவில்லை என்றும், ரபேல் வாட்ச் பில்லை ஏப்ரல் மாதத்திற்குள் தருவாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
நிர்மல் குமாரை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் கடந்த 6 ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அண்ணாமலையை விமர்சித்து பேஸ்புக்கில் நீண்ட பதிவை வெளியிட்டு அவர் கட்சியிலிருந்து விலகிய அவர் மறுநாளே நிர்மல் குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்தார்.

வார் ரூம் சுவர்
இதுகுறித்து முகநூலில் பதிவிட்டு இருந்த அவர்,"கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்.

ஊடக வெளிச்சத்தை தடுக்கிறார்
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்.

கே.டி.ராகவனுக்கு என்னாச்சு?
தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார். (அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை) அடுத்து பேராசிரியர் சீனிவாசன். மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள். அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.

நயினார் நாகேந்திரன்
அடுத்து பொன்.பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர். அவருக்கு சின்ன பிரச்சினை வருது. அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகனபதியை அசிங்கப்படுத்தினார். அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை.

அசிங்கமான வார்த்தைகள்
மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு **** என்று போலீஸ் தோரணையில் ஏளனமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்.

மிரட்டல் வருது
பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது. அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்கிறது இல்ல. சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது. இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு. எவனையாது தூத்தனும்ணா மொத்தமா தூத்துறது.

சங்கிகள் குறித்து பதிவு
அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான்? அவன் உழைப்பு என்ன? இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான். இவனே இப்படி பேசுறான்ன இவன் என்ன செய்தார்கள் என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க.
பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்.

வேவு பார்க்கிறார்
அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல. நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார்.

வெறிபிடிச்ச சங்கி
இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். எப்படியும் என்ன திட்டுவிங்க. அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சி பாருங்க.

100% உழைத்தேன்
இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு 100% உழைத்திருக்கேன். என்னை எப்படியும் திட்டி தீர்பீர்கள் அதற்கு முன்னால் ஒரு சித்தாந்த வாதியே இப்படி போறானே தவறு எங்கே நடக்குதுனு ஒரு முறை யோசிச்சிட்டு திட்டுங்க. இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர்கள் ஊழல் பட்டியல்
இந்த நிலையில் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்ட ஒரு பதிவில், "6 மாதங்களுக்கு முன்பு ஊழல் செய்யும் அமைச்சர்களின் பட்டியல்களை மாதம் மாதம் வெளியிடுவேன்.. இதுவரை எந்த பட்டியலும் வெளியிடவில்லை.. அதற்குள் திமுகவின் அனைத்து அமைச்சரும் புனிதர் ஆகிட்டாங்க போல.

ரபேல் வாட்ச் பில்
கடந்த 2 மாதங்களாக அமைச்சர் பற்றி வாய் திறப்பதே இல்லை ஈரோடு தேர்தல் உட்பட. அமைச்சரும் இவர் பற்றி வாய் திறப்பதில்லை. ஏப்ரல் மாதத்தில் ரபேல் வாட்சில் பில் கொடுப்பேன் அந்த பில்லாவது கொடுப்பாரா..?? இல்ல வாயிலே உருட்டுவாரானு பார்ப்போம்.." என்று பதிவிட்டு உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications