"விட்ருங்க" வேணாம்.. எடப்பாடியின் காதுக்கு போன "மேட்டர்".. கமலாலயம் க்ளைமேக்ஸ் என்ன? அவர் வேற வர்றாரே
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரஉள்ள நிலையில், பன்னீர்செல்வம் கூடாரமே டென்ஷனில் எகிற உள்ளதாம். இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி சிக்கல் இனி இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.. காரணம், 2 மாதங்களுக்கு முன்பேயே அதிமுகவுடனான கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்திருந்தார்.
சீட் விவகாரம்: ஆனால், சீட் விவகாரம் + தொகுதி நிலவரம் குறித்த முடிவுகள் இன்றைய தினம் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அன்று டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோதே, இதுகுறித்து சில தகவல்கள் கசிந்தன.

அதாவது, பாஜக தரப்பில் இரட்டை இலக்கத்தில் சீட் கேட்டதாகவும், அதிலும், முக்கிய தொகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்பட்டன.. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி முழு மனதுடன் அன்று சம்மதித்தாரா? அல்லது விரிவாக பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்தாரா? என்றெல்லாம் தெரியவில்லை. அதாவது, கூட்டணி மட்டுமே உறுதியாகியிருக்கிறதே தவிர, இன்னும் சீட் எண்ணிக்கை + தொகுதி நிலவரங்கள் இதெல்லாம் உறுதியாக தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருகிறார்.. எனவே, எப்படியாவது அமித்ஷாவை சந்தித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதற்காக டெல்லியிலுள்ள தனது சோர்ஸ் மூலம் எடப்பாடி முயற்சித்தபோதும், பார்க்கலாம் என்ற பாணியில் பதில் கிடைத்ததாம்..
நோ ரிப்ளை: அதாவது, ஓட்டலில் இந்த முறை அமித்ஷா தங்க உள்ளதால், அவரை சந்திக்க நேரம் இருக்குமா என்பதை அமித்ஷா, சென்னை வந்ததும் உங்களுக்கு சொல்கிறோம் என்று எடப்பாடிக்கு சொல்லப்பட்டதாம். எனவே, எப்படியும் அமித்ஷாவை சந்திக்க அப்பாயிண்மென்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
இது ஒரு புறம் இருக்க, அதிமுகவின் சீனியர்களோ வேறு ஒரு கருத்தை எடப்பாடிக்கு சொல்லி வருகிறார்களாம்.. அதாவது, "லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க, அவர்கள் தான் விரும்புகிறார்கள். அவர்களுக்கு தேவையென்றால், அப்பாயிண்மெண்ட் கொடுக்கட்டும்.. இனி நம்ம சைடில் இருந்து முயற்சிக்க வேண்டாம்.
ஒருவேளை சந்திக்கும் வாய்ப்பு அமைந்து, லோக்சபா தேர்தலில் இத்தனை இடங்களும், இந்த இந்த தொகுதிகளும் வேண்டுமெனவும் அவர்கள் அடம்பிடித்தால் எளிதில் இடம் கொடுத்துவிடாதீர்கள்" என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியபடியே இருக்கின்றனர் கட்சி சீனியர்கள்..
அப்பாயிண்ட்மென்ட்: இப்படித்தான், அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ்ஸூம் முயற்சித்து கொண்டிருக்கிறார். அவருக்கும் அப்பாயிண்ட்மென்ட் இதுவரை கிடைக்கவில்லையாம்.. இந்நிலையில், அமித்ஷாவை சந்திக்க அதிமுக தலைகள் இப்படி முட்டிமோதுவதை வழக்கம்போல, எதிர்மறையான விமர்சனங்களே கட்சி தொண்டர்களிடம் கிளம்பி வ
ர துவங்கி உள்ளது..!
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications