நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்!
சென்னை: ''நீங்கள் போட்டியிட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அமித் ஷா உங்களிடம் பேசுவார். அவரிடம் உங்க முடிவை சொல்லுங்க. அவரை சமாதானப்படுத்திட்டா உங்கள் விருப்பம் போல் நடக்கலாம் என்று பாஜக அண்ணாமலையிடம் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறாராம்.
தமிழக பாஜகவின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக நேற்று சென்னைக்கு வந்தார் பியூஸ் கோயல். நேற்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தலைமையில் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் என தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்தப் பெட்டிஷனில் ஆஜராகி இருந்தனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில முன்னாள் மாநிலத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக ஒரு பக்கம் முணுமுணுப்புகள் கேட்டாலும், முக்கியமாக அண்ணாமலைக்கு அதிமுக கூட்டணி இஷ்டமில்லை என்று கூறப்பட்டாலும்.. அதையெல்லாம் தற்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு வேட்பாளர் தேர்விலேயே முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது மேலிடம்.
நேற்று பியூஸ் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் கொடுக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலைப்பார்த்து விட்டு, இதில் ஏன் அண்ணாமலை பெயர் இல்லை ? என்று பியூஸ் கோயல் கேட்க, நான் போட்டியில் இல்லை; சீட்டும் கேட்கவில்லை என்று அவரே சொல்லிட்டதால அவரது பெயரை சேர்க்கவில்லை என்று நயினார் விளக்கம் அளித்திருக்கிறார்.
சரமாரியாக கேள்வி கேட்ட பியூஸ் கோயல்
அதனை மறுத்துப்பேசிய பியூஸ் கோயல், வேட்பாளர்களை இறுதி செய்வது தேசிய தலைமையா? இல்லை நீங்களா? என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்கவில்லையாம் நயினார் நாகேந்திரன்.
இதனையடுத்து, ஒரு தொகுதிக்கு தகுதியுள்ள மூவரை நாமினேட் பண்ணுங்கள்னு உங்களுக்குச் சொன்னோம் ; நீங்கள் 2 நபர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறீர்களே? இந்த 2 பேரும் உங்களுக்கும் இங்குள்ள சிலருக்கும் நெருக்கமானவர்களா? என்று கேள்வி எழுப்பியவர், அண்ணாமலை பெயரை எந்த தொகுதிக்கும் நீங்கள் பரிந்துரை க்கவில்லை.
பியூஸ் கோயல் கேட்ட முக்கிய கேள்வி
இது, நீங்களும் அதிமுக தலைவரும் போட்டுக்கொண்ட ஒப்பந்தமா? பரிந்துரைக்கதான் செய்யலை. இந்த கூட்டத்துக்கு ஏன் அவரை அழைக்கவில்லை? என்று சரமாரியாக கடுப்படித்திருக்கிறார் பியூஸ் கோயல். நயினாருக்கும் அங்கிருந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் சப்த நாடியும் ஒடுங்கியிருக்கு.
இதனையடுத்து, புதுச்சேரியில் இருந்த அண்ணாமலையை தொடர்புகொண்டு பேசிய பியூஸ்கோயல், எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே போட்டுட்டு சென்னைக்கு வாருங்கள் என்று உத்தரவிட்டார். சென்னைக்கு வந்த அண்ணாமலை, பியூஸ் கோயலை சந்திக்க, அவரிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தார்.
அண்ணாமலைக்கு போன அவசர அழைப்பு
அதற்கு, ''நான் தான் விருப்பப்பட்டு போட்டியிடவில்லை என தேசிய தலைமைக்கு கடிதம் கொடுத்தேன். எந்தவித மனவருத்தமும் எனக்கு இல்லை ஜி. எனக்கு நம்பிக்கையான ஜோதிடரும் கூட போட்டியிட வேண்டாம் என சொல்கிறார். இப்படியே இது இருக்கட்டுமே ! '' என்று சொல்லிபார்த்திருக்கிறார் அண்ணாமலை. ஆனால், அதை ஏற்காமல், ''நீங்கள் போட்டியிட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அமித் ஷா உங்களிடம் பேசுவார். அவரிடம் உங்க முடிவை சொல்லுங்க. அவரை சமாதானப்படுத்திட்டா உங்கள் விருப்பம் போல் நடக்கட்டும் '' என்று சொல்லி யிருக்கிறார் பியூஸ் கோயல்.
- சிறப்பு நிருபர் எழில்
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications