கள்ளக்குறிச்சி மாணவி பலி.. ஒரு இடத்தில் மட்டும் சிசிடிவி இல்லை! வீடியோவில் இருந்தது என்ன? பின்னணி
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் கொடுக்க மறுத்துவிட்டதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பலியானது தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் மாணவிக்கு நீதி வேண்டி பள்ளி வளாகம் முன் இன்று மக்கள் போராட்டம் செய்தனர். பள்ளியை மொத்தமாக மூட வேண்டும் என்று கூறி போராட்டம் செய்தனர்.

சிசிடிவி கேமரா
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் தற்போது சிசிடிவி கேமரா குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். பள்ளியில் இருந்த சிசிடிவி கேமரா எங்கே என்று மாணவியின் தாயார் செல்வி பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், நாங்கள் எங்கள் மகளை 11ம் வகுப்பு சேர்க்க டிசி கேட்டோம் கொடுக்கவில்லை. தொடர்ந்து அங்கேயே 12ம் வகுப்பும் படிக்க நேரிட்டது. இந்த நிலையில்தான் 12ம் வகுப்பு என்பதால் ஹாஸ்டலில் சேர்த்தோம். ஹாஸ்டல் போய் 13 நாட்களில் அவர் பலியாகிவிட்டார்.

ஹாஸ்டல்
13ம் தேதி எங்களுக்கு ஹாஸ்டலில் இருந்து போன் வந்தது. எங்கள் மகள் மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக கூறினர். அதன்பின் சில மணி நேரத்தில் எங்கள் மகள் இறந்துவிட்டதாக கூறினர். மருத்துவமனையில் சென்று பார்த்தோம். என் மகளின் தலை மற்றும் மார்பில் மட்டும் காயம் இருந்தது . என் மகள் உடலில் ரத்த காயம் இல்லை. வேறு ஏதோ நடந்து இருக்கிறது.

தற்கொலை
என் மகள் தற்கொலை செய்து இருக்க மாட்டாள். பள்ளியில் கேமரா இருக்கிறது. அதை காட்ட கேட்டோம். ஆனால் காட்டவில்லை. சிசிடிவியில் பதிவான காட்சிகளை காட்ட அவர்கள் மறுத்துவிட்டனர். இரவு 10.30 வரை பதிவான வீடியோ மட்டுமே உள்ளது. அவர்களிடம் வேறு எதுவும் இல்லை. அவர்கள் பள்ளியில் பல இடங்களில் கேமரா உள்ளது. அது எதிலும் என்ன நடந்தது என்றே தெரியாதா? இதை நம்ப முடியவில்லை என்று மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

கேமரா
இன்னொரு பக்கம் போலீஸ் தரப்போ.. பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி விழுந்துள்ளார். அது லேடிஸ் ஹாஸ்டல் என்பதால் அங்கு கேமரா இல்லை. இதனால் அங்கு எதுவும் பதிவாகவில்லை. இன்னொரு பக்கம் மாணவியின் உடலை காலையில் விடுதி காவலர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் மட்டும் கீழே இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது, என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications