ஆயிரத்தில் ஒருவரா நீங்க? படத்தில் சிறுத்தைப்புலி எங்கே இருக்கிறது? கண்டுபிடித்து ஜீனியஸ்னு நிரூபிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தைப்புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 11 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். படத்திற்கான விடையை ஆயிரம் பேரில் ஒருவர் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள். நீங்க ஜீனியஸ் தான் என்று நிரூபியுங்கள்.
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் விடைகளை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கவையாக இருக்கிறது. இதனால் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றது.
இப்படி படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிப்பவர்கள், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அனுப்பி அவர்களால் முடிகிறதா? என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த ஆப்டிகல் படத்தில் காட்டுப்பகுதியில் மரம் ஒன்று இருக்கிறது. இதில் ஒரு சிறுத்தைப்புலி மறைந்து இருக்கிறது.
இந்த சிறுத்தைப்புலி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். ஆனால் ஆயிரம் பேரில் ஒருவரால் தான் இதற்கான விடையை சரியாக சொல்லியிருக்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட 11 செகண்டிற்குள் சிறுத்தைப்புலி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது ரொம்பவே சவால் நிறைந்ததாகும்.
எனவே உங்கள் கவனிப்பு திறனுக்கு சிறந்த ஆசிட் டெஸ்டாக இந்த இல்யூஷன் படம் இருக்கும். என்ன போட்டிக்கு தயாரா?.. ஒகே உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4.. .. 11. ஒகே டைம் ஓவர். படத்தில் மறைந்து இருக்கும் சிறுத்தைப்புலியை கண்டுபிடித்துவிட்டீர்களா?.. கண்டுபிடித்திருந்தவர்கள் கில்லி தான். உங்கள் கண்பார்வை செம சார்ப். உண்மையிலேயே நீங்க ஜீனியஸ் தான்.
ஆனால் எவ்வளவு முயற்சித்தும் சிறுத்தைப்புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்த படம் ரொம்பவே சவால் நிறைந்தது. எனினும் ஈசியா கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ் தருகிறோம். இதை வைத்து கண்டுபிடிக்க முடிகிறதா என்று மீண்டும் முயற்சித்து பாருங்கள். அதாவது சிறுத்தப்புலியை காட்டிற்குள் தேட வேண்டாம். மரத்தில் மட்டும் பார்த்தால் போதும்.
இப்போது மரத்தில் மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள். இப்போது சிலர் கண்டுபிடித்து இருப்பார்கள். இப்போதும் தெரியவில்லையே என்று சொல்கிறவர்களுக்கு 2 வது டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது மரத்தின் கிளைகளில் நீங்கள் தேடுவது புரிகிறது. மரத்தின் கிளைகளில் தேடாமல் மரத்தின் தண்டுப்பகுதியை மட்டும் உற்று கவனியுங்கள்.
அட ஆமா.. இதை கவனிக்காமல் விட்டுட்டோமே என்று நினைப்பது புரிகிறது. வழக்கமாக இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இதற்கான விடை பெரும்பாலும் மரத்தின் கிளைகளில் தான் எதோ ஒரு வடிவத்தில் இருக்கும் என்று பார்த்து இருப்பீர்கள். இதனால் விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமம் இருந்திருக்கும். விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications