லுலு மால் வருது.. சென்னையில் இந்த இடமா? கோவையில் மேட்டுப்பாளையமா? குஷியான இளைஞர்கள்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் ஈஞ்சம்பாக்கத்தில் லுலு மால் வரப்போவதாக சொன்ன நிலையில், புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. என்ன அது?
லுலு மால் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆமதாபாத்தில் மிகப்பெரிய லுலு மால் அமைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் இந்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

சென்னை: கடந்த சில மாதங்களாகவே, சென்னையில் லுலு மால் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மிகப்பிரம்மாண்டமாக லுலு வரப்போவதாக அந்நிறுவனமும் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒருவேளை லுலு மால் சென்னையில் வந்தால் எங்கே கட்டப்படும் என்ற ஆர்வம் கிளம்பியது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் லுலு வரப்போவதாக சொன்னார்கள். ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.
பிறகு, ஓஎம்ஆர் ரோட்டில், ஈஞ்சம்பாக்கத்தில் லுலு மால் வரும் என்றார்கள். பாஷ்யம் நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில், பிரார்த்தனா தியேட்டர் இருந்த இடத்தில் லுலு மால் கொண்டுவரப்போவதாக தகவல் வெளியானது.
ஈஞ்சம்பாக்கம்: ஆனால், ஈஞ்சம்பாக்கத்தைவிட, மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தேர்வு செய்து அங்கே லுலு மால் கட்டலாம் என்று முடிவானதாகவும், சென்னையில் மத்தியிலேயே, லுலு மால் அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டன.
ஆனால், இதுகுறித்த எந்த அறிவிப்புமே இதுவரை வெளியாகவிலலை.. இன்னும் எந்த இடம் என்பதும் உறுதியாகவில்லை.. இதனால், சென்னைக்கு லுலு மால் வருமா? வராதா? என்ற சந்தேகம் கிளம்பியது. இப்படிப்பட்ட சூழலில்தான், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியே, லுலு மால் வரப்போவது என்று நம்பிக்கை தெரிவித்திருப்பது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.
கோவை லுலு: அதுபோலவே, கோவையிலும் இன்னொரு லுலு மால் வரப்போவதாக கூறுகிறார்கள்.. கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் என்ற பொதுமக்களின் ஆதரவை அபரிமிதமாக பெற்று வருகிறது. எந்நேரேமும் இங்கே கூட்டம் நிறைந்தவாறே காணப்படுகிறது. அதனால்தான், கோவையில் உணவுப்பதப்படுத்தும் மையத்தையும் கொண்டுவர லுலு நிறுவனம் முயன்று வருகிறது.
இதனிடையே, கோவையிலேயே மேலும் ஒரு லுலு நிறுவனத்தின் கிளை திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு பதப்படுத்தும் தளங்களை கொண்டு வர லுலு நிறுவனம் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
லுலு மால்கள்: இந்த லுலு மால் மேட்டுப்பாளையத்தில் அமைவதாக இருந்தால், உள்ளூர் மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைககும் என்று நம்பப்படுகிறது..
அதாவது, கோவையில் இரண்டு நிறுவனங்களும், சென்னையில் ஒரு மாலும், திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூரில் தலா ஒரு நிறுவனமும் என லுலு மால் பிளான் செய்து வருகிறதாம். இவைகளில் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட பிறகுதான், கோவையில் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.
கோவை: கோவை, தஞ்சை, சென்னை என லுலு மால்கள் வருவதற்கு, வியாபாரிகள் சங்கங்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வரும்நிலையில், அந்தந்த மாவட்ட மக்களோ மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். இந்த மால்கள் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இன்னொரு மால்: இந்த லுலு மால் போலவே, மற்றொரு மால் சென்னைக்கு வரப்போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. சென்னை எஸ்ஆர்பி சிட்டியில் மால் ஆப் மெட்ராஸ் என்ற பிரபலமான மால் வரப்போகிறதாம்.. சுமார் 1.2 மில்லியன் சதுர அடியில் இந்த மால் கட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.. அத்துடன், PVR சினிமா தியேட்டரும் கட்ட போகிறார்களாம்.. அதுவும், 9 தியேட்டர்களும் இதில் அடக்கம் என்கிறார்கள்.
பேண்டலூன்ஸ், மேக்ஸ், டிரெண்ட்ஸ், போன்ற பிரபல கடைகளையும் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவலும் வெளியானது.. ஆக, விரைவில், லுலு மால்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications