லண்டன் போன முதல்வர்.. கூடவே சென்ற 2 நடிகைகள், 2 ரெட்டிகள்.. ஆனால் அமைச்சர் கீர்த்தனா மட்டும் இல்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலீடு ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய்யுடன், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் செல்லவில்லை? அரசுப் பயணத்தில் ஆதவ் அர்ஜுனா ரெட்டி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் ஏன் உடன் சென்றார்கள்? இவர்களுக்கும் இந்த அரசு முறைப்பயணத்துக்கும் என்ன சம்பந்தம்? இது ஒரு "அல்லி ராஜ்ஜியம்" போல செயல்பட்டு சுரண்டுவதற்காகவே கூடவே போகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் முதலமைச்சர் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் நிறம் என்ற சேனலில் பேட்டி தந்துள்ள அய்யநாதன், "லண்டன் பயணத்தின் போது 15,300 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ரூ.11,000 கோடி, 700 கோடி மற்றும் 300 கோடி ரூபாய் என பல்வேறு ஒப்பந்தங்கள் ஒரே நாளில் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கெனவே இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களின் துணை நிறுவனங்களே.

CM London Investment Trip

லண்டன் 15,300 கோடி ரூபாய் முதலீடு

குறிப்பாக, ரூ.11,000 கோடி முதலீடு செய்வதாக சொல்லப்படும் நிறுவனத்தின் முதன்மை அலுவலகம் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் தான் உள்ளது. இதன் மூலம் 7800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினாலும், முந்தைய ஒப்பந்தங்களை போலவே இதன் உண்மைத்தன்மையையும் ஆராய வேண்டும்.

ஏனென்றால், முதலீடுகளை ஈர்ப்பதில் மற்ற மாநில முதலமைச்சர்கள் காட்டும் தீவிரமான அணுகுமுறை இதில் இல்லை. தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் லண்டன் போகவில்லை? ஆதவ் அர்ஜுனா ரெட்டி மற்றும் விஷ்ணு ரெட்டி எதற்காக லண்டன் போனார்கள்? இதற்கெல்லாம் அரசிடம் தெளிவான பதில் இல்லை.

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா எங்கே

தொழில் துறை அமைச்சரை ஒரு "டம்மி" அமைச்சராக நடத்துவதை விட, முதலமைச்சரே தனது பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு டம்மியாக செயல்படுகிறார்.

தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள், திறமையான தொழிலாளர்கள், மின்சாரம் மற்றும் உள்நாட்டு சந்தை வாய்ப்புகள் நிறைந்த மாநிலம். ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத நிர்வாகம் நடக்கிறது.

லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய்

லண்டன் பயணத்தின்போது அஜித் சந்திப்பு, நடிகை திரிஷா உடன் இருந்தது போன்ற சினிமா சார்ந்த விஷயங்களே மீடியாவில் பெரிதுபடுத்தப்படுகின்றன. ஊடகங்களும் முதலமைச்சர் வீட்டை விட்டு கிளம்பியது முதல் லண்டன் ஹோட்டலில் தங்கியிருந்தது வரை ஒரு "கியூரியாசிட்டி" உருவாக்கி லைவ் செய்கின்றன..

முதலமைச்சர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார், ஆனால் ஒரு சாதாரண மனிதராக இல்லாமல் முதலமைச்சராக இருப்பதால் அனைவரது கவனமும் அவர் மீது விழுகிறது... அரசிடமோ, முதலமைச்சரிடமோ சீரியஸான அரசியல் அணுகுமுறை இல்லை.. அரசுப் பணிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டங்களும் இல்லை.. இவர்கள் எதற்கும் பதில் கூற மாட்டார்கள், பத்திரிகையாளர்களையும் சந்திக்க மாட்டார்கள்.

2 நடிகைகள், 2 ரெட்டிகள்

இது அரசு ரீதியான பயணம் என்று சொல்லப்பட்டாலும், முதலமைச்சர் இதில் தனிப்பட்ட முறையில் செயல்படுகிறார். முதலீட்டாளர்களைச் சந்தித்து ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிட்டு புறப்படுகிறார். அவரை தொடர்ந்து லண்டனுக்கு 2 நடிகைகள் வரிசையாக செல்கிறார்கள்.. ஆனால், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் இந்த லண்டன் பயணத்தில் உடன் செல்லவில்லை என்ற கேள்விக்கு இதுவரையில் எந்த ஒரு தெளிவான பதிலும் வரவில்லை.

அரசுப் பயணத்தில் ஆதவ் அர்ஜுனா ரெட்டி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் ஏன் உடன் சென்றார்கள்? தமிழ்நாட்டு அரசியலுக்கோ அல்லது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அரசுப் பணிகளுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாத இந்த ரெட்டிகள், இந்தப் பயணத்தில் எதற்காகக் கலந்துகொண்டார்கள்? இதற்கும் பதிலுமில்லை..

அல்லி ராஜ்ஜியம்

தொழில் துறை அமைச்சர் கூட செல்லாத இடத்தில், இவர்கள் பின்னணியில் நின்று அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.. இது ஒரு "அல்லி ராஜ்ஜியம்" போல செயல்பட்டு சுரண்டுவதற்காகவே கூடவே போகிறார்கள்.

ஒரு முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் லீவி எடுத்துக் கொண்டு பயணம் மேற்கொள்வதில் தவறு இல்லை, ஆனால் அரசுக்கு இருக்கும் நெருக்கடிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல், இதை முதலீட்டாளர்கள் சந்திப்பு என்ற பெயரில் கேமராக்களுக்காக ஒரு நாடகமாக நடத்துகிறார்கள்" " என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+