மோடியை டம்மியாக்கவந்த நேசமணி.. நேசமணியை தூக்கி சாப்பிடும் #Where is Mugilan.. செம ஹாட்டான டிவிட்டர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    #PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ

    சென்னை: மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் தமிழக மக்கள் டிவிட்டரில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்தனர். ஆனால் நேசமணிக்காக நேரத்தை வீணாக்காமல் சமூக ஆர்வலர் முகிலனுக்கு பயன்படுத்தலாம் எனக்கூறி முகிலன் எங்கே என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது.

    நரேந்திர மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.

    அண்டை நாடுகளின் தலைவர்கள் உட்பட 8000 விருந்தினர்கள் பங்கேற்க பிரமாண்டமாக நடைபெறுகிறது மோடியின் பதவியேற்பு விழா. மோடியின் பதவியேற்பு விழாவை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே உற்று நோக்குகிறது.

    உலகளவில் ட்ரென்ட்

    உலகளவில் ட்ரென்ட்

    இந்திய டிவி சேனல்கள் மோடியின் பதவியேற்பு விழா, அருண் ஜேட்லியின் உடல்நிலை, மத்திய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் என படு சூடாக விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து நேற்று ஒரு ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டாகியது.

    இங்கேதான் தொடங்கியது

    இங்கேதான் தொடங்கியது

    அதாகப்பட்டது, #Pray For Nesamani. இதற்கு காரணம் கடந்த 27ஆம் தேதி சிவில் இன்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் பக்கத்தில் சுத்தியல் படத்தை போட்டு உங்கள் நாட்டில் இதை எப்படி அழைப்பார்கள் என்று கேட்கப்பட்டதுதான். இதற்கு தமிழக இளைஞர் ஒருவர் இது சுத்தியல் என்று அழைக்கப்படும், தட்டும்போது டங்டங் சத்தம் வரும், ஜமீன் பேலஸில் வேலை செய்யும் போது சுத்தியல் பெய்ன்ட் கான்ட்ரக்டர் நேசமணி தலையில் விழுந்துவிட்டது பாவம் என பதிவிட்டார்.

    இந்தியாவில் முதலிடம்

    இந்தியாவில் முதலிடம்

    அதற்கு பதில் கொடுத்த மற்றொரு இளைஞர் நேசமணி இப்போது எப்படி இருக்கிறார் என கேட்டு கலாய்க்க டிவிட்டரில் ட்ரெட்டானது Pray For Nesamani ஹேஷ்டேக். இந்த ஹேஷ்டேக் நேற்று உலகளவில் ட்ரென்ட்டானது. உலகளவில் 5வது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் ட்ரெட்டிங்கில் உள்ளது.

    காமெடி கதாப்பாத்திரம்

    காமெடி கதாப்பாத்திரம்

    இதில் காமெடி என்னவென்றால் நேசமணி யார் என்று தெரியாமலேயே மக்கள் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேசமணி 2001ஆம் ஆண்டு வெளியான பிரன்ட்ஸ் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த வடிவேல் பெயராகும். பேஸ்புக்கில் சிவில் இன்ஜினியர்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட நேசமணி இவர்தான், தற்போது டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் நேசமணியும் இவர்தான்.

    முகிலன் எங்கே?

    சீரியஸ்ஸான விஷயங்கள் எவ்வளவோ இருக்க மக்கள் ஏன் சினிமாவில் வந்த காமேடி கேரக்டருக்காக பிரார்த்தனை செய்வத வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நேசமணிக்கு சமமாக #where is Mugilan? என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளது.

    செம ஹாட்

    நேசமணிக்காக நேரத்தை வீணாக்குவதற்கு பதில் முகிலனை தேட முயற்சிக்கலாம் என மக்கள் ஒரு புறம் டிவிட்டரில் குமுறி வருகின்றனர். ஒரே நாளில் Pray For Nesamani, Wher is Mugilan, Modi sarkar2 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாவதால் டிவிட்டர் செம ஹாட்டாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+