திமிங்கலத்தை அலேக்கா "தூக்கறாரு" எடப்பாடி பழனிசாமி.. கோட்டை விடுதா பாஜக? திமுகவை நெருங்குது அதிமுக
சென்னை: அதிமுக திடீரென யூடர்ன் அடித்துவிடும் போல தெரிகிறது. மெகா கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதிமுக மற்றும் பாஜக என இரு தரப்பிலுமே மறைமுக பேச்சுவார்த்தையை பாமக நடத்தி வருவதாக சொன்னார்கள்.. இதில், தாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக தரப்பில் ஒதுக்க தயங்குகிறார்களாம். அதனால்தான், பாஜகவுடன் கூட்டணிக்கு பாமக முயற்சிப்பதாக தகவல் வெளியானது.

பாமக சீட்: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. தற்சமயம் இந்தியா கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்று தெரியவில்லையாம். ஒருவேளை பாமகவுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவியை வைத்து அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கணக்கு போடுகிறாராம் அன்புமணி..
அந்தவகையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாமக திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.
கூட்டணி: ஒருவேளை ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெறுமானால், பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும், இதில் 8 இடங்கள் வட தமிழகத்திலும், 2 இடங்கள் தென் தமிழகத்திலும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூடுதல் தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன.
அதுமட்டுமல்ல, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு, அன்புமணிக்கு மட்டுமே விருப்பம் உள்ளநிலையில், டாக்டர் ராமதாஸ் தயக்கம் காட்டுகிறாராம்.. அதேபோல, பாமக மாவட்ட செயலாளர்கள் சிலரும் பாஜகவுடன் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது...
அதிமுக கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவுடனேயே கூட்டணி அமைப்பது என்ற முடிவை பாமக தற்போது எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 10 தொகுதிகளை கேட்டதற்கு, 7 தொகுதிகளை ஒதுக்க அதிமுக ஓகே சொல்லிவிட்டதாம். இதையடுத்து 2 கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதால், இன்று மாலையே இன்றைய தினமே இரு கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து இன்று சென்னை திரும்புவதால், இதற்கு பிறகுதான், பேச்சுவார்த்தைக்கு நடைபெறும் என்றும், கூட்டணி தொடர்பான அறிவிப்பு இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இன்று அறிவிப்பு: பாமகவை தங்கள் கூட்டணியில் பாஜக இடம்பெற செய்யும் பட்சத்தில், அதிமுகவுக்கான வாக்கு சதவீதம் சிதறும் என்றே கணிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திடீரென அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதேபோல, தேமுதிக தரப்பிலும் கூட்டணி முடிவுகள் இறுதி செய்யப்படலாம் என்கிறார்கள்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications