Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது செந்தில் பாலாஜி சிறையிலேயே இல்லையா.. உற்று பார்க்கும் மத்திய உளவுத்துறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் அவரின் செல்லில் அடைக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Where is Senthil Balaji? Why he is not in his cell after the Enforcement Directorate investigation?

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணை: அதன்பின் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் 5 நாட்கள் கஸ்டடியும் எடுக்கப்பட்டார். 5 நாட்கள் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விசாரணை முடிந்து கடந்த 12-ந்தேதி இரவு புழலுக்கு அனுப்பப்பட்டார் செந்தில்பாலாஜி. புழல் சிறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி ஒப்படைக்கப்பட்டார்.

இங்கே இருக்கிறார்?: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் அவரின் செல்லில் அடைக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.

புழலுக்கு சென்ற அவரை அவருக்குரிய செல்லில் அடைக்கப்படவில்லை. வழக்கம்போல, சிறையில் இருந்த மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டார். இது சிறை துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்காக செய்தனர். அரசின் உத்தரவின்படியே நடக்கிறது. கஸ்டடி முடிந்து 12-ந்தேதி நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை ஆஜர் படுத்தியபோது, அவரது உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், ரிமாண்ட் செய்யப்பட்ட அவரை அவருக்குரிய செல்லில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசின் உத்தரவும், செந்தில் பாலாஜியின் கவனிப்பும் இருப்பதால் செல்லில் அடைக்கப்படாமல் மருத்துவமனையில் சேர்த்தனர் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் விசாரணை காரணமாக அவரின் உடல்நலம் கொஞ்சம் குன்றி இருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் சிறைக்கு பதில் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய உளவுத்துறை ரகசியமாக விசாரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+