15 + 10 + 4 + 4 + 2 + 2 + 1 + 1 + 1 சீட்.. இப்படி ஒன்னு இப்போ ஓடுது.. "ஐயா" என்ன சொல்ல போறாரோ தெரியல
சென்னை: பாஜக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை... ஆனால், மும்முரமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
எம்பி தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக மட்டுமே தற்சமயம் பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது.. திமுகவுக்கு மாற்றான இதே போன்ற பலமான கூட்டணியை அதிமுகவும் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் பாஜகவையும் சமாளித்து, மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. எனினும், பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியாமல் இழுபறியாய் உள்ளது..

பாஜக சான்ஸ்: இந்த சான்ஸை பாஜக சரியாக பயன்படுத்தி, கூட்டணி விஷயத்தில் அதிமுகவையே ஓவர்டேக் செய்துவிடும் போல தெரிகிறது.. நேற்றுகூட, அமமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.. 10 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன், ஓபிஎஸ் தரப்பில் பாஜகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கூட்டணியில் இன்னும் சிலர் இணைவதால், வெறும் 7 சீட்களை மட்டுமே தருவதாக பாஜக சொன்னதாம்.. அதனால்தான், பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படாமல், அடுத்த சில தினங்களில் மறுபடியும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்கிறார்கள்.
தகவல்கள்: இப்படிப்பட்ட சூழலில்தான், பாமகவை பற்றின தகவல்களும் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.. தாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக தரப்பில் ஒதுக்க தயங்குகிறார்களாம். அதனால்தான், பாஜகவுடன் கூட்டணிக்கு பாமக முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, தற்சமயம் இந்தியா கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்று தெரியவில்லையாம். ஒருவேளை பாமகவுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவியை வைத்து அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கணக்கு போடுகிறாராம் அன்புமணி..
பாஜக கூட்டணி: அந்வகையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாமக திட்டமிட்டு வருவதாகவும், ஐயாவும், அன்புமணியும், தைலாபுரம் தோட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து முடிவெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக இன்றையே தினமே ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், அப்படி ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெறுமானால், பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, இதில் 8 இடங்கள் வட தமிழகத்திலும், 2 இடங்கள் தென் தமிழகத்திலும் ஒதுக்கீடு செய்யப்படுமாம்.
பேச்சுவார்த்தை: ஆக, தமாகா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போன்றவை கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், அமமுக, ஓபிஎஸ், பாமக, தேமுதிகவும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிகிறது.
மொத்தமுள்ள 40 இடங்களில், வெறும் 15 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட்டு, மிச்சமுள்ள 25 தொகுதிகளை கூட்டணிக்கு தரப்போகிறதாம்.. பாமகவுக்கு 10, அமமுக 4, ஓபிஎஸ் 2, மற்ற கட்சகிளுக்கு 1 சீட்களை ஒதுக்க யோசித்து வருவதாக தெரிகிறது.
சின்னம்: சின்னத்தை பொறுத்தவரை தினகரன் தெளிவாக இருக்கிறார்.. காரணம், தாமரை சின்னத்திலேயே அமமுகவையும் போட்டியிட வேண்டும்என்று பாஜக அழுத்தம் தருவதாக செய்திகள் கசிந்த நிலையில், தினகரன்அதை மறுத்துள்ளார்.
"அமமுக போட்டியிட, சின்னம் தொடர்பாக எந்த நிர்பந்தமும், அச்சுறுத்தலும் எங்களுக்கு இல்லை.. குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.. சின்னம் குறித்து எந்தவிதமான அழுத்தத்தையும் பாஜக எங்களுக்கு தரவில்லை.. கூட்டணி கட்சிகளை மிகவும் கண்ணியத்துடன் பாஜக நடத்துகிறது" என்றெல்லாம் தினகரனே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குழம்பும் ஓபிஎஸ்: அந்தவகையில், அமமுகவுக்கு குக்கர் சின்னமே ஒதுக்கப்படும் என்றார்கள்.. பாமகவுக்கு மாம்பழம் சின்னத்துக்கு ஓகே கிடைத்துவிட்டதாம்.. ஆனால், தேமுதிக, சரத்குமார், போன்றோரை தாமரை சின்னத்திலேயே போட்டியிட செய்யலாம் என்கிறார்கள்.
ஆனால், ஓபிஎஸ் மட்டும் வழக்கம்போல், இரட்டை இலையிலேயே இன்னும் பிடிவாதமாக இருக்கிறாராம்.. அல்லது தனிச்சின்னத்தில் போட்டியிட போவதாக சொல்லி வருகிறாராம்.. எப்படியோ, எதுவானாலும் இன்று, நாளைக்குள் பாஜகவில் எல்லாம் சுபமாய் முடிந்துவிடும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications