சீனுக்கு வரும் ராமதாஸ்.. “தமிழை தேடி..” சென்னை டூ மதுரை வரை யாத்திரை! அரசியலுக்காக இல்லையாம்
தமிழ் மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழை தேடி சென்னை முதல் மதுரை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள், கோயில்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து பகுதிகளிலும் தமிழை கொண்டு வர சென்னை முதல் மதுரை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். தமிழ் மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் தேதி இதை தொடங்கும் ராமதாஸ் 28 ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கடிதம் எழுதி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் 'தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் தமிழ் இல்லை.

அண்ணை தமிழை மீட்க வேண்டும்
இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவும், நோக்கமாகவும் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழுக்காக பரப்புரை
பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 21 ஆம் நாள் உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

சென்னை டூ மதுரை
வரும் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழைத் தேடி... விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி தமிழைத் தேடி.... விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது." என்று குறிப்பிட்டு இருக்கும் அவர் பயண விபரத்தை பகிருந்து உள்ளார்.

பயண விபரம்
21.02.2023 - வள்ளுவர் கோட்டம் முதல் சென்னை மறைமலை நகர்
22.02.2023 - மதுராந்தகம் முதல் திண்டிவனம்
23.02.2023 - புதுச்சேரி முதல் கடலூர்
24.02.2023 - சிதம்பரம் முதல் மயிலாடுதுறை
25.02.2023 - குத்தாலம் முதல் கும்பகோணம்
26.02.2023 - தஞ்சை முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம்
27.02.2023 - வல்லம் முதல் திருச்சி
28.02.2023 - திண்டுக்கல் முதல் மதுரை (நிறைவு நிகழ்வு)

அரசியல் கலப்பற்ற பயணம்
இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிட்டு உள்ளதாவது, "தமிழைத் தேடி.... விழிப்புணர்வு பரப்புரை பயணம் அரசியல் கலப்பற்ற, அரசியல் நோக்கமற்ற பயணமாகும். மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் தாயைக் காப்பது எப்படி தவிர்க்க முடியாத கடமையோ, அதேபோல், தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை மொழியான தமிழ்மொழியை காக்க வேண்டியதும் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழைத் தேடி.... விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி நாளில் தொடங்குகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications