நீங்க கழுகுப்பார்வை கொண்டவரா? படத்தில் கம்பளிப்பூச்சி எங்கே இருக்குன்னு கண்டுபிடிங்க! 5 செகண்ட் டைம்
சென்னை: உங்கள் கண்பார்வையை சோதிக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இல்யூஷன் படத்தில் ஒரே ஒரு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் கொத்து கொத்தாக பழங்கள் காய்த்து கிடக்கின்றன. இதில் தான் ஒரு கம்பளிப்பூச்சி ஒன்றும் உள்ளது. அந்த கம்பளிப்பூச்சி எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது சிந்தனைத்திறனை தூண்டும் வகையில் உள்ளன. ஒருவரின் நினைவாற்றல், அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய படங்களை வைத்து ஒருவரின் நினைவாற்றலை கண்டுபிடிக்க முடியும். இதனால் தான் ஆப்டிகல் புதிர் படங்களை அரசு போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது.

ஒருவரின் சிந்திக்கும் திறனை தூண்டுவதோடு, மூளைக்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதனால் நெட்டிசன்கள் பலரும் இத்தகைய படங்களை தேடி தேடிப் பார்த்து தங்களது அறிவுத்திறனை சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்று தங்கள் கண்பார்வையை சோதிக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த இல்யூஷன் படத்தில் கம்பளிப்பூச்சி எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டும்.
படத்தில் ஒரே ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் எண்ணற்ற பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கின்றன. இதில் தான் ஒரே ஒரு கம்பளிப்பூச்சி பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியாத வகையில் இருக்கிறது. அந்த கம்பளிப்பூச்சி எங்கே இருக்கிறது? என்று 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர்.
குறிப்பிட்ட 5 விநாடிக்குள் படத்தில் கம்பளிப்பூச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டீர்களா.. அப்போ சூப்பர்.. உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் உண்மையிலேயே கழுகுப்பார்வை கொண்டவர் தான். ஆனால் 5 நொடிக்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள், ஒன்றும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். ஈசியா கண்டுபிடிச்சி விடலாம்.
படத்தை உற்று கவனித்தாலே கம்பளிப்பூச்சி இருக்கும் இடம் தெரிந்துவிடும். ஏனென்றால் படத்தில் இலைப்பகுதியில் மட்டும் பாருங்கள். வேறு எங்கும் தேடவேண்டாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால், உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.













Click it and Unblock the Notifications