படத்தில் "கிப்ட் பாக்ஸ்" எங்கே இருக்கு?.. 7 செகண்ட் டைம்.. கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிப்ட் பாக்ஸ் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 7 செகண்ட்டிற்குள் நீங்கள் படத்தில் இருக்கும் கிப்ட் பாக்ஸை கண்டுபிடித்தால் ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் பிறந்தநாளை நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதில் ஏகப்பட்ட பொருட்கள் இருக்கும் நிலையில், ஒரு கிப்ட் பாக்ஸ் உம் இருக்கிறது. பல பொருட்களுக்கு மத்தியில் இருக்கும் இந்த கிப்ட் பாக்ஸை நீங்கள் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும்..
என்ன சவாலுக்கு ரெடியா?... 1.. 2.. 3.. 7.. டைம் ஓவர்.. படத்தில் இருக்கும் கிப்ட் பாக்ஸை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால், நீங்க ஜீனியஸ் தான். உண்மையிலேயே உங்கள் கண்பார்வை செம சார்ப்பாக இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட 7 செகண்டில் கண்டுபிடிக்க வில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். கூடுதல் டைம் எடுத்து தேடிப்பாருங்கள்..
இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.. இப்போது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் ஒரு டிப்ஸ் தருகிறோம். அதனை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.. படத்தின் வலது புறம் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.. அதிலும், படத்தின் வலது புறத்தின் அடிப்பக்கத்தில் மட்டும் பாருங்கள்.. எளிதில் கண்டுபிடித்துவிடலாம்..
இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.. இப்போது கூட கண்டுபிடிக்க வில்லையே என்று நினைப்பவர்கள் படத்தின் வலதுபுறம் அடிப்பகுதியில் இருக்கின்ற டேபிள் பக்கத்தில் உள்ள வாட்டர் கேன் அருகில் மட்டும் உற்று பாருங்கள் கிப்ட் பாக்ஸ் எங்கே இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அப்படியும் தெரியவில்லை என்றால், இங்கே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் பொழுதுபோக்கு அம்சங்களோடு, சவால் மிக்கதாகவும் இருப்பதால், அதற்கு விடையை கண்டுபிடிக்கும் நபர்கள், தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள். இதனால், ஒளியியல் மாயை எனப்படும் இந்த படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications