மலைகளுக்கு நடுவே.. "போட்டோகிராபர்" எங்கே இருக்கிறார்? 10 நொடி டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் போட்டோகிராபர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். பலராலும் 10 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
பொதுவாகவே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றாலே நம் கண்களை குழப்பி சிந்திக்க வைக்கும். கண்களை ஏமாற்றி நம் மூளைக்கு வேலை கொடுக்கும். முதலில் நாம் பார்க்கும் போது ஒருவித தோற்றத்தினையும், சற்று கூர்ந்து பார்த்தால் வேறுவித தோற்றத்தினையும் காண்பிக்கும்.

கிட்டத்தட்ட கானல் நீர் எப்படி தூரத்தில் இருந்து பார்க்கிறபோது இருக்கும், ஆனால் அருகில் சென்று பார்த்தால் இருக்காதோ அது போல தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும். இப்படி நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை வைப்பதனால் நெட்டிசன்கள் பலரும் இந்த படங்களில் மறைந்து இருக்கும் விடைகளை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பார்க்கிறார்கள்.
அப்படி பலவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் இயற்கை காட்சிகளை புகைப்படம் பிடிப்பதற்காக போட்டோகிராபர் ஒருவர் உள்ளார். ஆனால் இந்த படத்தை முதலில் பார்க்கும் போது நம் கண்களுக்கு மலைகளும், காடுகளும் மட்டுமே தெரிகிறது.
இந்த படத்தில் எங்கே மனிதன் இருக்கின்றான் என்று தான் உங்களுக்கு தோன்றும். ஆனால் உண்மையில் இந்த படத்தில் போட்டோகிராபர் ஒருவர் இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். 10 செகண்ட் டைம்.. அதற்குள் போட்டோகிராபர் இருக்கும் இடத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
என்ன சவாலுக்கு தயாரா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 .. 3.. 4.. .. 10. ஓகே டைம் ஓவர். குறிபிட்ட 10 செகண்டுக்குள் போட்டோகிராபரை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க அதிபுத்திசாலிதான். ஆனால் 10 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள். ஏனென்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள்.
எனவே விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தின் இடதுபுறத்தின் மத்தியில் மட்டும் உற்று கவனியுங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்காதவர்களுக்கு விடை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் போட்டோகிராபர் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications