விஜய் நெற்றியில் பொட்டு எங்கே? விஜய் வருகை திமுகவுக்குதான் பலம்! பாண்டே பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் கொள்கைகளை அப்படியே விஜய் பின்பற்றினால் தவெக காணாமல் போய்விடும் என்று ரங்கராஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார்.

திமுகவுக்கு எதிராகத்தான் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்ற கருத்து முன்பு முன்வைக்கப்பட்டது. ஆனால், விஜய் கிட்டத்தட்ட திமுகவின் கொள்கைகள் படியே செயல்படத் தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன. தவெக மாநாட்டுக்கு திமுக அனுமதி தராமல் இழுத்தடிப்பதாக ஒரு வாதம் எழுந்த நிலையில், திடீரென்று ஈ.வெ. ராமசாமி பிறந்தநாளை ஒட்டி விஜய், பெரியார் திடலுக்குச் சென்று மாலை மரியாதை செய்துள்ளார். விஜய் நினைத்திருந்தால், அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்திருக்க முடியும். அதேபோல் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்திருக்க முடியும். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு அவர் திடலுக்குச் சென்றுள்ளார். அது திமுகவையும் திமுக ஆதரவு சக்திகளையும் 'கூல்' செய்வதற்குத்தான் என்றும் சொல்லப்படுகிறது.

vijay dmk

இந்நிலையில் பெரியாருக்கு விஜய் மாலை அணிவித்தது சம்பந்தமாக வலதுசாரி ஆதரவாளர் ரங்கராஜ் பாண்டே சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "திமுகவிலிருந்து சர்வ வல்லமை கொண்ட தலைவர் ஒருவர் வெளியேறி உருவாக்கியதுதான் அதிமுக. அதிமுகவின் தாய்க் கட்சி திமுகதான். ஆனால், திமுகவைவிட அதிக ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுகதான். எனவே விஜய் கடவுள் மறுப்புக் கொள்கையில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்பதுதான் கேள்வி. திமுகவினர் ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவார்கள். ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வாழ்த்து சொல்லமாட்டார்கள்.

எம்.ஜி.ஆர் அப்படி இல்லை. ஜெயலலிதா அப்படி இல்லை. இவர்கள் எல்லோரையும் அரவணைக்கக் கூடிய தலைவர்களாக இருந்தார்கள். இதில் விஜய் எப்படிச் செயல்படப் போகிறார் என்பது போகப் போகத்தான் தெரியும். பெரியார் பிறந்தநாளை ஒட்டி விஜய் அவரது கட்சி எக்ஸ் பக்கத்தில் ஒரு கார்டு வெளியிட்டுள்ளார். அதில் உள்ள விஜய்யின் நெற்றியில் பொட்டு இல்லை. விஜய் கட்சியின் லெட்டர் பேட்டில் உள்ள விஜய் படத்தில் பொட்டு இருக்கிறது. நெற்றியில் பொட்டு வைப்பது பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு விஜய்யின் பதில் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.

லெட்டர் பேட்டில் உள்ள படத்தில் விஜய் பொட்டு வைத்திருப்பதற்கும் பெரியார் வாழ்த்து அட்டையில் விஜய் பொட்டு இல்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம்? அது உங்களுக்குப் புரிகிறதா? விஜய் திமுகவைப் போலவே இன்னொரு கட்சியாக வரவேண்டிய தேவை இங்கே இல்லை. அதற்குத்தான் திமுக இருக்கிறதே? திமுகவின் அனைத்து கொள்கைகளையும் விஜய் ஆதரிக்கிறார். எனவே விஜய்க்கு ஓட்டுப் போட்டு திமுகவை ஆதரிக்கத் தேவை இல்லையே? நேரடியாக திமுகவுக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெறவைத்துவிடலாமே? மதிமுக ஏன் கரைந்து போனது? மதிமுகவுக்கும் திமுகவுக்குமான கொள்கை வேறுபாடு என்ன? அப்படி எதுவுமே இல்லை. திமுகவுடன் ஒரு மானா மட்டும் சேர்ந்துள்ளது அவ்வளவுதான். ஒரு கொள்கை வேறுபாடு வேண்டாமா?

விஜய் நீட் வேண்டாம் என்கிறார். சிஏஏ வேண்டாம் என்கிறார். இருமொழி கொள்கை என்கிறார். பெரியார் எங்கள் தலைவர் என்கிறார். இதற்கு ஏன் தவெக? திமுக என்று வைத்துவிடலாமே? நான் ஏதோ ஊகத்தில் சொல்லவில்லை. அவரது ட்ராக் ரெக்கார்டு பார்த்துத்தான் சொல்கிறேன். அவர் இதுவரை சொன்னதையும் பேசினதையும் வெளியிட்டதையும் வைத்துத்தான் பேசுகிறேன். விஜய் கட்சியின் கொள்கையில் என்ன வேறுபாடு இருக்கிறது? இதுவரை விஜய் பாஜகவின் திட்டங்களையும் கொள்கைகளையும் தான் எதிர்த்துப் பேசி இருக்கிறார். நீட், சிஏஏ ஆகியவை பாஜகவின் திட்டங்கள். அதை விஜய் எதிர்க்கிறார். திமுக ஆட்சியைப் பற்றி அவர் விமர்சனம் செய்யவில்லை. கொள்கையைப் பற்றி விமர்சிக்கவில்லை. எனவே பாஜக விஜய்யை எதிர்ப்பதில் அர்த்தம் உள்ளது. தமிழிசையும் எல்.முருகனும் அதனால்தான் விஜய்யை எதிர்க்கிறார்கள்.

இதை எல்லாம் வைத்துக் கணிக்கும் போது விஜய்யின் வருகையால் திமுகவுக்குத்தான் லாபம். அவர் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை எல்லாம் பிடிப்பார். அதனால் திமுக மீண்டும் 2026இல் ஆட்சிக்கு எளிதாக வந்துவிடும். உதாரணமாக திமுகவுக்குக் கூட்டணிக்கு 40% வாக்கு உள்ளது. எதிர்ப்பு என்பது 60% உள்ளது என வைத்துக் கொள்வோம். அந்த 60 என்பது மூன்றாகப் பிரியும். அதில் ஆளுக்கு 20 ஆக மாறும். இதனால் திமுக மீண்டும் பலமான கட்சியாக ஆட்சியைப் பிடிக்கும். இதுதான் நடக்கப் போகிறது.

எப்போதும் திமுகவுக்கு எதிரான கட்சி அதிமுகதான். ஆனால், அண்ணாமலை வருகைக்குப் பின் திமுகவுக்கு எதிர் பாஜக என மாறியது. இப்போது திமுகவுக்கு எதிர் தவெக என மாறினால் களம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என திமுக நம்புகிறது. ஆகவே, விஜய்யை எதிர்ப்பதுபோல் அக்கட்சித் தலைவர்கள் சிலர் பேசுகிறார்கள். இதான் லாஜிக்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+