Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டையிலே பெரிய ஓட்டை.. ஓபிஎஸ் கூடாரத்தில் "சிவப்பு கொடியா".. கவனிச்சீங்களா, "தலை'யை வேற காணோமாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுகவில் ஓபிஎஸ் இணைய போகிறாரா என்ற தகவல்கள் பரபரத்து வரும்நிலையில் இன்னொரு சந்தேகமும் கிளம்பி உள்ளது.. அதை ஊர்ஜிதம் செய்யும்வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், கொளுத்தி போட்டுவிட்டு போயுள்ளது பெரும் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.

நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை, ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார்.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், பழைய நண்பரை மீண்டும் சந்தித்து விட்டார் தினகரன்.

Where is vaithilingam and why didnt manoj pandian, vaithiyalingam meet ttv dinakaran

இந்த சந்திப்பின் பின்னணி காரணம் என்று பெரிதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.. ஒத்த கருத்துக்களை இருவருமே கொண்டிருக்கும் நிலையில், தென்மண்டல செல்வாக்குகள் வலுப்பெற்றுள்ளன.

தினகரன் + ஓபிஎஸ்: ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் மீண்டும் அழைத்து வந்தாலும், தினகரன், சசிகலாவுடனான தொடர்பையே நாடி செல்வார் என்பதைதான் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்திருந்தார்.. இன்னும்சொல்லப்போனால், ஓபிஎஸ்ஸை அன்று அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிவைக்க காரணமே, பாஜக + மன்னார்குடி குடும்பம் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஓபிஎஸ்ஸை விலக்கி வைப்பதன்மூலம், பாஜகவுக்கு செக் வைக்க முடியும் என்றும் நம்பப்பட்டதாக தெரிகிறது. எனினும், பாஜகவை அதிமுகவால் எந்த சூழலிலும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் கூட்டணி மூலம் இன்று நிஜமாகி உள்ளது.

ஜெய பிரதீப்: இதனால், தினகரனை சந்தித்திருப்பதன் மூலம் அமமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. மற்றொருபக்கம், தனி அணியாகவே செயல்பட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், தனிக்கட்சியை துவங்குவாரா? என்ற சந்தேகமும் உள்ளது.. ஆனால், எப்படி பார்த்தாலும், இன்னொரு மகனான ஜெயபிரதீப் பாஜகவில் விரைவில் இணைந்துவிடுவார் என்கிறார்கள்..

அதேசமயம், ஓபிஎஸ்ஸின் அரசியல் இப்போது எதை நோக்கி நகர்கிறது என்ற அடுத்தக்கட்ட கேள்வியும் எழுகிறது.. ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதில் இருந்தே ஓபிஎஸ்ஸூக்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வருவது மூத்த தலைவர் வைத்திலிங்கம்தான்.. அதனால்தான் வைத்திலிங்கத்தை இழுக்க எடப்பாடி தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.. ஆனால், வைத்திலிங்கத்தின் விசுவாசத்தை கண்டு, மிரண்டு போய் ஒதுங்கி கொள்ளும் நிலைமை எடப்பாடி டீமுக்கு வந்தது..

வைத்தியலிங்கம் : டெல்டாவை பொறுத்தவரை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தாண்டி, அதிமுகவில் வேறு யாரும் அந்தஅளவுக்கு பெரிதாக வளரவில்லை.. வைத்திலிங்கத்தின் கோட்டையாகவே டெல்டா விளங்குவதால்தான், அச்சமூக வாக்குகளை திமுக சிந்தாமல் சிதறாமல் அள்ள முயன்றது.. இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா புள்ளியான வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் முயற்சிப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் பரவின.

அதிமுகவின் கோட்டையான கொங்குவில் எடப்பாடி சரிவை கண்டுவரும்நிலையில், டெல்டாவையும் தக்க வைக்க முயன்று கொண்டிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பு நடந்துள்ளது.. இதில் விஷயம் என்னவென்றால், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன், தினகரனுடனான இந்த சந்திப்பை ஓபிஎஸ் நடத்தி உள்ளார்.. ஆனால், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை... இது மிகுந்த கவனம் பெற்று வருகிறது..

குட்டைய குழப்பிட்டாரே: ஒருவேளை, ஓபிஎஸ் மீது இவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா? அல்லது எதேச்சையாக நடந்த சந்திப்பா அது என்று தெரியவில்லை.. ஆனால், அதற்குள் செய்தியாளர்களிடம் பேசும்போது, திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் ஜெயக்குமார். டிடிவி.தினகரனை நேரில் சென்று சந்தித்த விவகாரத்தில் ஓபிஎஸ் மீது அவருடன் இருக்கும் ஒரு சிலரே அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று பஞ்ச் வைத்துவிட்டு போயுள்ளார் ஜெயக்குமார்.. அந்த சிலர் வைத்தியலிங்கம், ஜேசி பிரபாகரன், மனோஜ் பாண்டியனா? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+